Friday, 17 November 2017

சிவகிரி பாண்டியர்களும் - வன்னியர்களும்


பாண்டிய மன்னர்கள் காலம் முதல் தென் தமிழகத்தில் ஆட்சியுரிமை பெற்று அதன் பிறகு விஜயநகர அரசின் காலத்தில் பாளையக்காரர்களாகவும் செயல்பட்ட வன்னிய அரசு சில இருந்தன.


தென் தமிழ்நாட்டின் மதுரையில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள் அப்பகுதியில் சிறந்து விளங்கிய சிலர் தலைமையில் பாளையங்களை ஏற்படுத்தி தம் அரசுக்கு பாதுகாப்பு நல்க வழிவகை செய்தனர் . அவ்வாறு வன்னியர்கள் தலைவர்களாக நியமிக்க பெற்ற பாளையங்கள்

தென்மலை (சிவகிரி )
அளகாபுரி
ஏழாயிரம் பண்ணை
ஆத்திப்பட்டு
சமுசிகாபுரம்
வேப்பங்குளம்  
பன்னீராயிரம் பண்ணை

ஆகியவையாகும் . இந்த ஏழு வன்னியர் பாளையங்களும் அதிக வருவாய் ஈட்டியதும் , ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதிலும் முன்னனணியில் இறந்தது சிவகிரி பாளையம் ஆகும் .
இன்றைய நிலையில் சிவகிரி பாளையம் பற்றி பேசினால் , அது வன்னியர் சமூகத்தது இல்லை எங்களுடையது என்கின்றனர் மறவர் சமூகத்தவர் .

அதனை பற்றி பார்க்கும் முன்பு முதலில் சிவகிரி பாளையம் பற்றியும் அது உருவான செய்தியையும் பார்த்துவிடுவோம்

விஜயநகர அரசின் காலத்துக்கு முன்பே பாண்டிய அரசுகளாக ஆட்சி செய்ய ஆரம்பித்து பின் விஜயநகர அரசின் காலத்தில் தென்மலை யில் ஆட்சி செய்ய தொடங்கி , அதன் பின் எவ்வாறு சிவகிரிக்கு வந்தார்கள் என்று இப்போது பார்ப்போம் .
சிவகிரி முதலில் தென்மலை என்றுதான் இருந்தது . இன்றும் தென்மலையும் அதன் ஜமீன் குடும்பமும் இருக்கிறார்கள் . இவர்கள் அனைவரும் அழகாபுரி சமஸ்தானத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்ற ஒரு செய்தியும் உண்டு . ஆயினும் சிவகிரி தென்மலையில் இருந்து தனியாக ஒரு அரண்மனையை கட்டி ஆட்சிபுரிந்தவர்கள் . ஒரேய குடும்பத்தினர்தான் . தென்மலை ஜமீனின் ஒரு பிரிவினர்  சிவகிரிக்கு செல்ல , மற்ற தென்மலை காரர்கள் தென்மலையிலேயே தன ஆட்சியை தொடர்ந்தனர்
சிவகிரி தென்மலை அழகாபுரி போன்ற வன்னிய அரசுகள் தென் தமிழ்நாட்டில் தோன்றியமை :
மதுரையை ஆண்டு வந்த "ஜெய துங்க பாண்டியன் " ஆணையின் பேரில் திருப்பூவணத்தை ஆட்சி செய்து வந்த "தாஷ்டிக சுந்தர பாண்டிய வன்னியனார் " ஒரு திருடனை அடக்கி கொன்றதால் , பாண்டிய மன்னனால் பாராட்ட பெற்று தென் தமிழ்நாட்டில் "சுண்டன் குளம் " என்ற இடத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டுவரும்படி கட்டளையிட்டார்.
இது போல அளகாபுரியை ஆட்சி செய்த பாளையக்காரர்களின் தொடக்கத்திற்கும் இது போன்ற ஒரு செய்தி காணப்பெறுகிறது .

"அந்நாளில் பாண்டிய அரசர் 'தாஷ்டிக சவுந்தர பாண்டிய வன்னியனாரை' அழைத்து தெற்கில் "சுண்டன் " என்ற ஒருவன் சிறு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தொல்லைகள் தருவதாகவும் , அவனை வன்னியனாரும் அவன் பிள்ளைகளும் ஒடுக்கி வர வேண்டும் என்று கட்டளையிட்டார் . அதன் பிரகாரம் தென் சீமை சென்று சுண்டன் என்பவனை ஒடுக்கி மதுரையில் வந்து அரசனை கண்டதால் , மன்னர் மகிழ்ந்து தென்சீமைக்கு சென்று ஆட்சி செய்யுங்கள் என்று கூறி பல விருதும் வெகுமதியும் அளித்து பட்டமும் கட்டி அனுப்பினார் " என்பதே அந்த செய்தி . 

தாஷ்டிக சவுந்திர பாண்டியனார் , பாண்டிய மன்னர் தென்சீமையில் அளித்த பகுதியில் தம் பிள்ளைகளில்

ஒருவரை அவனியங்கோன் ஏந்தலிலும்
ஒருவரை அச்சந்த விளத்தானிலும்
ஒருவரை புத்தூரிலும்
ஒருவரை தென்மலையிலும்
ஒருவரை திருவேங்கடத்திலும்

அமர்த்தி ஆண்டு வரும்படி செய்தார் என்பதாகும்  .

மேற்கூறப்பட்ட தாஷ்டிக சவுந்தர பாண்டியனார் மற்றும் பாண்டிய மன்னர் சார்ந்த செய்திகள் , இந்த சமஸ்தானத்து வாரிசுகளால் கூறப்பட்டு அதனை அப்போதைய தொல்லிய இயக்குனர் திரு . நடன காசிநாதன் அவர்கள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலாக வெளியிட்டுள்ளார் .
இந்த நூலை எழுத உதவியவர்கள் யார் என்ற செய்தியையும் இந்த கட்டுரையின் முடிவில் தருகிறேன்


இதில் சொல்லப்படும் சுண்டன் என்னும் கலகக்காரன் இருந்த பகுதி இப்போதைய சுண்டன்குளம் என்றும் , அப்பகுதிதான் முதன்முதலில் தாஷ்டீக சுந்தர் பாண்டிய வன்னியர் ஆட்சி புரிந்து  , அதன் பிறகு அங்கிருந்து தென்மலையை தலைநகராக கொண்டு ஆட்சியை தொடங்கியுள்ளனர் .


சிவகிரி பாளையக்காரர்களின் மரபு வழி பட்டியலில் கிபி 1916 ஜூலை திங்கள் 24-ஆம் நாள் திருத்தம் செய்து அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது .

அப்பட்டியலில் அரசுக்கு தெரிந்த முதல் பாளையக்காரராக "விஜயரங்க வன்னியனார் " குறிப்பிடப்பட்டுள்ளனர் .
அடுத்ததாக "சங்கரபாண்டிய வன்னியனாரும் ",
மூன்றாவதாக "பெரிய சங்கு வன்னியனாரும் "
நான்காம் பாளையக்காரராக "வரகுணராம வன்னியனாரும் "

காணப் பெறுகின்றனர் .
நான்காம் பாளையக்காரர் "வரகுணராம வன்னியனார் " அவர்களின் தொடக்க கால ஆட்சி வரை இவர்களின் தலைநகரம் தென்மலைதான் . கிபி 1733- யில் வரகுணராம வன்னியனார் இருந்திருக்கிறார் . அவ்வாறெனில் அவருக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் அரசுக்கு தெரிந்த வகையில் மூவர் இருந்துள்ளனர்

தென்மலையில் ஆட்சி செய்த வரகுணராம வன்னியனார் அவர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார் என்பது , அவர் மீது கடிகை முத்து புலவரால் பாடப் பெற்ற " திக்கு விஜயம் " என்னும் நூலாலும் , புகழேந்தி புலவர் இயற்றிய "சிவகிரி காதல் " என்னும் நூலாலும் புரிந்துகொள்ள முடிகிறது .

வடகரை பாளையக்காரருக்காக தென்மலை வன்னியனார் அவர்கள் , திருமலை நாயக்கர் மந்திரி ஆறை அழகப்ப முதலியார் அவர்களை கொலை செய்ததால் , வடகரை பாளையக்காரர் சிவகிரி பகுதியில் தென்மலையாருக்கு அரண்மனை கட்டி தருகிறார் .

தென்மலை வன்னியனார் சிவகிரிக்கு வந்து ஆண்டு கொண்டிருக்கையில் , அழகப்ப முதலியாரின் மகன் குமாராசாமி தளவாய் சிவகிரி மீதி படையெடுத்து வரகுணராஜா வன்னியனாரை கொலை செய்கிறார் .

அவரை பற்றிய பாடல்கள்


சிவகிரியை தலைநகரமாக கொண்டு வரகுண பாண்டிய வன்னியனார் ஆண்டு வருகையில் , இம்மன்னன் காஞ்சிபுரம் பிரம்மகுல அகோர சிவந்தபாதைமூருடையத் தேசிகரவர்களை தரிசனம் செய்து திருநீறு பெற்று வாழ்ந்து வரும் நாளையில் , அத்தேசிகர் தென்காசி விசுவநாதசுவாமி சன்னதியில் மடத்ததிபராக வந்திருப்பதை அறிந்த மன்னர்  , குருவுக்கு காணிக்கை செய்வதற்காக ஒரு தரும சாசனம் வெளியிட்டுள்ளார் .


அதில் மன்னரின் மெய்க்கீர்த்தி
  • அரசுபதி
  • வில்லி
  • வன்னிய குலதிபதி
  • அக்கினி கோத்திரத்தான்
  • அக்னி குதிரை ஏறியவன் ( வன்னிய சமூகத்திற்கு தவிர இந்த வாக்கியம் வேறு யாருக்கும் இல்லை . குறிப்பாக முக்குலத்தில் யாருக்கும் இல்லை )
 போன்றெல்லாம் புகழ்கிறது 

 தென்மலை சமஸ்தானம் எவ்வாறு சிவகிரியிலும் உருவெடுத்தது ? என்பதனையும் அவரின் மெய்க்கீர்த்திலும் அவர் புகழப்படும் வாக்கியங்களையும் நாம் இப்போது பார்த்தோம் .

இப்போது சிவகிரி அரசு வன்னியரா மறவரா என்ற கேள்விக்கு விடை காணுவோம் ?

தென்தமிழ்நாட்டில் வன்னியர்கள் இல்லை . அதனால் அவர்கள் எல்லாம் மறவர்கள்தான் என்று ஒரு சிலர் எண்ணுவதால் , தெற்கிலும் வன்னியர் உண்டு என்பதில் இருந்து சில ஆதாரங்களை தர யாம்  கடமை பட்டுள்ளோம்

தென்காசி செப்பு பட்டையம் வன்னியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது
அதாவது


பாலி நதி வடக்கரை வரை கிருஷ்ண வன்னியன்
பெண்ணை வரை சம்பு வன்னியன்
காவிரி வரை வீறு வன்னியன்
சேது வரை கங்கை வன்னியன்
தில்லை கீள்பால் காளத்தி வரை இந்திரா வன்னியன்


என்று விவரிக்கிறது . இதில் சேது என்பது ராமநாதபுரம் வரை என்ற செய்தி . வன்னியர்கள் தமிழகத்தின் எல்லை வரை ஆட்சி செய்தனர் என்பதற்கும் , வாழ்கின்றனர் என்பதற்கு  இது ஒரு ஆதாரம் . 
இப்பட்டையம் தென்காசி செப்பு பட்டயம் / பன்னீராயிரம் செப்பு பட்டையம் என்ற பெயர்களில் வெளி வந்துள்ளது


தெற்கில் வன்னியர்கள் இல்லை என்பது மிகத்தவாறு . திண்டுக்கல் , நெல்லை , தூத்துகுடி அல்லாது கன்னியாகுமரி வரை வன்னியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்  . அவர்கள் எண்ணிக்கைதான் கூடி குறையுமே தவிர . மக்களே இல்லை என்பது பொய்யான வாதம்



சரி இப்போது சிவகிரி பாளையம் வன்னியர்களுடையது என்பதை விளக்கும் சில ஆதாரங்களை பார்ப்போம்

ஆதாரம் 1:
தென்னிந்திய சாதியும் குலங்களும் என்ற நூலில் திரு.எட்கர் தர்ஸ்டன் அவர்கள் வன்னியர்களின் பாளையங்களாக குறிப்பிடும் பகுதிகள் . இப்பகுதிகளில் வன்னிய (PALLI) பெண்கள் இஸ்லாமியர்களை போல கோஷா முறையில் திருமணம் செய்வதாக குறிப்பிடுகிறார் . இன்றும் பிச்சாவரம் , அரியலூர் சமஸ்தானத்தில் வன்னிய ராஜ வம்ச பெண்கள் இதனை தொடர்கின்றனர் .


ஆதாரம் 2:

திருநெல்வேலி கெசட்டில் அங்குள்ள பாளையங்கள் பற்றிய செய்திகள் இருக்கிறது . அதில் சிவகிரி பற்றி முதலில் பதிந்த செய்தி . இது வன்னியர் என்றும் பிறகு வன்னியரா ? வன்னிய மறவரா என்ற குழப்பத்திலேயே பதிந்தவர்கள் 

கெசட்டின் இறுதியில் தெளிவாக " சிவகிரி பாளையக்காரர்கள் தம்மை "வன்னியர் மறவர் " என்று சொல்லி கொள்ளும் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் . வன்னியர் சாதியினர் என்று தெளிவாக பதிந்துள்ளனர் .  

அதோடு அல்லாமல் அவர்கள் பாண்டிய மன்னரால் சுண்டன்குளத்தில் குடி அமர்த்தப்பட்டு , அதன் பிறகு தென்மலைக்கும் அதன் பிறகு சிவகிரிக்கும் சென்று ஆட்சி செய்த செய்தியையும் குறித்துள்ளனர்


ஆதாரம் 3:


history of the millitary transactions of the british nation in indostan  என்ற நூலில் திரு. சாரமே அவர்கள் சிவகிரி சமஸ்தானத்தவர்கள் சாதியால் வன்னியர்கள் என்பதை குறித்துள்ளார்


ஆதாரம் 4:


வரகுணராமன் புகழப்படும் "சிவகிரி காதல் " என்னும் நூல்
"வன்னிய குல தீப வரகுணராம பாண்டியன் "

 என்றும் ,
"வன்னியகுல ராச வரகுணராம பாண்டியன் "

 என்றும் கூறுகிறதே தவிர , எங்கும் அவர்களின் சான்றுகள் " வன்னிய மறவர் " என்றோ " வன்னிக்குட்டி மறவர்  " என்றோ ஒரு சான்றும் குறிப்பிடவில்லை


இந்நூல் சிவகிரி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி வாரிசுகளால் நேரடியாக நேர்க்காணல் செய்து எழுதப்பட்டு வெளியிடப்பட்ட " தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " நூலில் இருந்து

ஆதாரம் 5:

சிவகிரி வன்னியர் சமூத்தவரே என்பதற்கு மேலும் சில செப்புப்பட்டையும் சான்றாக அமைந்துள்ளது .
முதல் செப்புப்பட்டையும் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த திரு .முனுசாமி நாயுடு அவர்களிடம் இருந்து பெறப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுகாக்கப் படுகிறது ("வன்னியர் ", செப்பு பட்டயம் எண் 21)

 இதில் குறிப்பிடும் செய்தி " சிவபெருமான் தம் மழு ஆயுதத்தை ஏறிட்டு பார்க்க , உடன்  ஐவர் பிறந்தனர் . அவர்களுக்கு பார்வதி தேவியார் திருநீறளித்து திருப்பள்ளித்தாம ஆரம் கொடுக்க , அவர்கள் அதனை தரித்து கொண்ட காரணத்தால் , "பள்ளி " என்றும் , அந்த படைக்கு தலைவன் என்பதால் "படையாட்சி " என்றும் , பரமசிவன் வாக்கால் பெயரிடப்பட்டார்கள் . பிறகு ஈசன் அவர்களை தம்மருகில் அழைத்து பூலோகத்தில் வல்லான் வலியான் என்று இரண்டு அரக்கர்களை  சம்ஹாரம் செய்ய அனுப்பினார் என்றும் அப்போது அவர்களின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க , காஞ்சிப்புரம் சன்னதி மடத்தில் தீட்சை பெற அருளியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது ".





வன்னியர்கள் பாலாறு பெண்ணையாறு முதல் சேது தெற்கு வரை ஆட்சி செய்தவர் என்பதும் கீழே உள்ள செப்பேட்டில் உள்ளது 



அதே போல வரகுணராம பாண்டியனும் காஞ்சிபுரம் சன்னதி மடத்தில் தீட்ச்சை பெற்றவரே  . 

 இரண்டாம் பட்டயம் காஞ்சி மாவட்டம் அன்னவராத சவுந்திரியப்பட்ட முத்து கச்சேஸ்வர குருசுவாமியார்வர்கள் மடத்தில் இருக்கிறது . இதில் மடத்துக்கு " மதகிரி வன்னியர் , மகுடந்தரித்த வன்னியர் , வீரமார்த்தாண்ட வன்னியர் , வீர பிரதாப வன்னியர் , வீர தீர வன்னியர் " என்று ஐந்து வகை வன்னியர்களும் அவர்களது குடிமக்களும் பற்றி கூறுகிறது .மேலும் இவர்கள் வாழ்ந்து வரும் பகுதியை குறிப்பிடுகிறது .அதாவது 

காஞ்சிபுரம் முதல் கிழக்கிலும்
அங்கிகோட்டத்துக்கு  மேற்கிலும்
தேவப்புரயாகை வடக்கிலும்
இராமநாதபுரத்துக்கு தெற்கிலும் 

 என்று குறிப்பிடுகிறது .

ஆக சிவகிரி ,அழகாபுரி , ஏழாயிரம் பண்ணை ஆகியவை  ராமநாதாபுரத்துக்கு தெற்கில் உள்ளவையாகும்.

இவ்வன்னியர்கள் "சம்புமாமுனி வேள்வியில் பிறந்து வாதாவி , இனத்தாவி , இரத்தனகிரி முதலாகவுள்ள அகில சத்துரு நிவாரணம் பண்ண , வீரசட்டை கட்டி , அக்னி கொடி , புலிக்கொடி , சிங்கக்கொடி , அனுமக்கொடி , பஞ்சவர்ண விருது படைத்தவர்கள் என்றும் கூறுகிறது .

ஆதலால் சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை ஆகியது வன்னிய பாளையம் என்பது தெளிவு .

Nelson manuel book –history of Madura region I think.
ஆதாரம் 6:

1874 யில் பிறந்து 1964 யில் மறைந்த தேசிய கவிஞர் சேலம் .அர்த்தநாரீஷ்வர்மா அவர்கள் தாம்பாடியுள்ள ஒரு பாடலில் தமிழ்நாட்டில் அரசு செய்த வன்னிய அரசுகளை பற்றி பதிவு செய்துள்ளார் .

அர்த்தநாரீசவர்மா யார் ? ஏப்பேற்பட்டவர் அவர் ? இதற்கான பதிலும் நமக்கு தேவைதானே . ஆம் அவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கீழே




இவர் தம் க்ஷத்ரியர் என்னும் இதழில் எவையெல்லாம் வன்னிய அரசுகள் என்று  1900 -களிலேயே பதிவு செய்துள்ளார். அரியலூர் மழவர் , அழகாபுரி மற்றும் சிவகிரி பாண்டியர் ,பிச்சாவரம் சோழனார் , உடையார்பாளையம் , பரூர் கச்சிராயர் , ஊற்றாங்கால் வணங்காமுடியார்  என்பதாகும்


ஆதாரம் 7:

 கிபி 1891 டிசம்பர் திங்கள் 7 ஆம் நாளில் சிவகிரி கஸ்பாவில் வாழும் ராமுத்தேவனின் மகன் இருளாண்டி தேவன் , மறவர் சாதி , விவசாயம் செய்பவர் அதே ஊரில் வாழும் வரகுண பாண்டிய சின்னத்தம்பியார் அவர்களின் மகன் சங்கிலி வீரபாண்டிய சின்னத்தம்பியார் , வன்னிய சாதி , ஜமீன்தாருக்கு நில விற்பனை செய்து தந்துள்ளார் . இந்த ஆவணம் தெளிவாக ஒருவரை மறவர் என்றும் தேவர் பட்டதாகவும் , ஜமீன் சார்ந்தவரை வன்னியர் சாதி என்றும் தெளிவாக கூறுகிறது .  ( பக்கம் 68 - தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு )
இந்த ஜமீன் ஒருவேளை வன்னிய மறவர் , வன்னிக்குட்டி மறவர் என்றால் , ஒரு இடத்திலாவது , "மறவர் என்ற சொல்லாடலை பயன்படுத்திருப்பர் . ஆனால் தேவர் என்றோ , மறவர் என்றோ சொல்லாமல் தெளிவாக வன்னியர் சாதி என்கிறது அவர்களின் ஆவணங்கள் .

இது போல இன்னும் சில சொத்து சார்ந்த ஆவணங்களும் இருக்கின்றன .. அதில் சில செய்திகள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலில் ஜமீனின் ஆதரவுடன் பதியப்பட்டுள்ளது . அவை கீழே





இதே போல கருப்பாயி நாச்சியார் அவர்கள் எழுதி கொடுத்த கொடை களிலும் ஸ்த்ரீ வன்னியர் என்றே குறிப்பிடப்பட்டுளள்து



இதனுடைய பத்திர நகலும் இருக்கிறது .. அதில் பெண் என்பதற்கு ஸ்த்ரீ என்றும் ஜாதி வன்னியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது



ஆதாரம் 8:

மைனர் வரகுணராம பாண்டிய வன்னியனார் இறந்த பிறகு , அவரது பாட்டனார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் (பெரியவர் ), தம்பி வரகுண ராம பாண்டிய சின்னத்தம்பியாரின் (சிறியவர் ) பெயரன் செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் சிவகிரியில் இருந்து கொண்டு திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியருக்கு 1914 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 21 யில் ஒரு விண்ணப்பம் அனுப்பியுள்ளார் . அவ்விண்ணப்பத்தில் 09-01-1914 அன்று இரவு 10.00 மணி அளவில் இயற்க்கை எய்து விட்ட சிவகிரி ஜமீன்தார் இராமலிங்க வரகுணராம பாண்டிய வன்னியனாருக்கு திருமணம் ஆகாமல் , குழந்தைகள் இல்லாததாலும் அச்சமீனுக்கு தாம்தான் உரிய வாரிசு என்றும் தமக்கு அச்சமீனை ஆளும் உரிமையும் சொத்தும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் .
இதில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட ஜமீனை சார்ந்தவர்கள் அனைவருமே இந்து மதம் , வன்னியர் சாதி என்றே குறிப்பிடபட்டுள்ளனர்


நீதிமன்ற ஆவணங்கள்






 மேலே இரண்டு நீதிமன்ற ஆவணத்தை இணைத்துள்ளேன் .

வழக்கு நடப்பதால் முழுமையான நீதிமன்ற ஆவணங்கள் எனக்கு தரப்படாவிட்டாலும் , சில முக்கிய சாதி சார்ந்த பகுதியை எனக்கு கொடுத்து உதவியவர்  ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவரே .

தற்போதைய சிவகிரி ராஜா (03-அகிடோபர் -2016) " விக்னேஸ்வர ராஜாவின் " சொந்த சித்தப்பா வும் , சிவகிரி அரசருக்கும் , அழகாபுரி இளவரசி வழி வம்சத்தவரான "சவுந்தர ராஜ  பாண்டிய வன்னியனார் அவர்கள்




சில மறவர்கள் இவரை தம்மை தேவர் என்றும் முக்குலத்தோர் என்றும் சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்திய பொழுது , அவர் முகநூலில் "முனிராஜ் வாணாதிராயர் " என்ற பெயரில் இயங்கிய மறவர் சாதிக்காரருக்கு

" தான் உயிருள்ள வரை வன்னியராகவே இருப்பேன் " என்று பதிலடி தந்த செய்தி இது



 சிவகிரி ஜமீன்தாரின் நினைவு நாளுக்கு , அவரின் நேரடி
வாரிசு என்றும் , அழகாபுரி இளவரசிக்கு பிறந்தவருமான குட்டிராஜா என்பவர் இவரின் தந்தையார் ..

அந்த ராஜாவுக்கு ஒரு மகளும் இருந்துள்ளார் .. இவர்கள் அனைவரும் இன்றும் சுத்தமான வன்னியர் சாதியிலேயே திருமணம் செய்துள்ளனர் ..

இவர்கள் நேரடி வாரிசுகள் என்று நினைவு அஞ்சலி செலுத்திய விளம்பர செய்தி



 ஆதாரம் 9 :
ஏன் இப்படி மறவர்கள் உரிமை கோருகிறார்கள் ? எதனால்

இந்த குழப்பம் ?

நியாயமான கேள்விதான்

சுமார் 1950-கல் வரை இந்த குழப்பங்கள் இல்லை . காரணம் அதுவரை இது சுத்தமான வன்னியர் சமஸ்தானமாகவே இருந்தது .
சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .




இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .





வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் . 

இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "சங்கிலி வீரப்ப பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .

இந்த சங்கிலி வீரப்ப பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..

அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...

இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .
அதன் பிறகு வந்த வி.எஸ் .வரகுணராம பாண்டிய சின்னத்தம்பிய வன்னியனார் அவர்கள் கிபி 1972 யில் முடிசூடி சேத்தூர் ஜமீன் மறவர் "ராணி திரிபுர சுந்தரி நாச்சியார் " அவர்களை திருமணம் செய்தார் .
இவர்களுக்கு பிறந்த சேவுக பாண்டியன் என்னும் "விக்னேஷ் ராஜா " அவர்களே இப்போதைய ஜமீன்தார்



இருப்பினும்  தென்மலை ,சமுசிகாபுரம் , அழகாபுரி மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .

சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..

கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..






நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி
ஆதாரம் 10:

சிவகியில் கலப்பு ஏற்படும் முன்பு வரை ஆட்சி செய்து இறந்த சுத்தமான வன்னிய சிவகிரி அரசர் இறந்தபோது அவருக்கு இறுதிகாரியம் செய்தது அவரின் மனைவி அழகாபுரி சமஸ்தானத்து இளவரசியார் .
இந்த அழகாபுரி இளவரசியின் மகன் தான் எமக்கு நீதிமன்ற ஆவணம் தந்து உதவியது .
அவரை பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன் .. இறுதி சடங்கு செய்த ஆவணம் இதோ கீழே ..

ஆதாரம் 11:

சிவகிரி அரசர்களின் சொத்து பாத்திரத்திலும் தெளிவாக " சத்ரிய வன்னியர் " என்றே குறிப்பிடப்படுகிறது . ஆண்டு 1932




வன்னியர் தவிர வேறு எவருக்குமே சாதி கெசட் "வன்னியர் " என்றோ " சத்ரிய வன்னியர் " என்றோ குறிப்பிடமாட்டார்கள் என்பதற்கு இந்திய அரசாங்கம் வெளியிட்ட ஆவணம் ஒரு ஆதாரம் 


ஆதாரம் 12 :
சிவகிரி தென்மலை போன்றவைக்கு ஆதியாக விளங்கும் அழகாபுரி பற்றிய செய்தியிலும் அவர்கள் வன்னியர் என்றே குறிப்பிடப்படுகிறது


ஆதாரம் 13:

சிவகிரி தற்போதைய ராஜா அவர்கள் மட்டும் " வன்னியர் - மறவர் " கலப்பு ஆனாலும் , அவர்களின் உறவினர்கள் , மற்றும் தென்மலை அழகாபுரி போன்ற இதர ஜமீன்தார்கள் இன்னும் சுத்த வன்னியர்களாகவே தம்மை கருதுகிறார்கள் . வாழ்கிறார்கள் .

இவர் தற்போதைய சிவகிரி சேவுக பாண்டியர் என்னும் விக்னேஷ் ராஜாவிற்கு உறவினர் .. வன்னியர் சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்து வருபவர்

தென்மலை சமஸ்தானத்தத்தை சேர்ந்த வீரபாண்டிய வன்னியனார் அவர்களின் மகனின் சாதி சான்றிதழ்

இந்த வீரபாண்டியன் வேறு யாருமில்லை . சிவகிரியில் வாரிசு முடிந்து போக , சொத்துக்களை நாங்கள் பராமரிக்கின்றோம் என்று சொல்லி சிவகிரி ராசாவின் தம்பி மகன்கள் மூவர் தென்மலையில் இருந்து அப்போதைய கலக்கட்டருக்கு கடிதம் எழுதி உரிமை பெற்றனர் . அதனால் மூத்தவர் சிவகிரிக்கு சென்று ஆட்சி புரிய, அவரின் மகனே மறவரின் காதல் மணம் புரிந்தார் .


மற்றும் இருவர் தென்மலையிலேயே தங்கினார். இதில் மூன்றாமவர் மகனே வீரபாண்டிய வன்னியனார் . பங்காளி முறை இவர் .. இன்னும் சுத்த வன்னியராகவே இருக்கிறார் 




தென்மலை ஜமீனின் வாரிசுகளாக அண்ணன் தம்பிகள் மொத்தம் நாலு பேர் . இதிலும் ஒருவரை தவிர மற்ற மூவரும் வன்னியரின் திருமணம் செய்தவர்கள் . ஒருவர் மட்டும் மறவரின் திருமணம் செய்தவர் . ஆனாலும் வன்னிய சமூக பற்றாளர் .

அவர் பெயர் பெரியண்ண பாண்டியன் . எனக்கு பல செய்திகளை கொடுத்து உதவியவர்



இவர் சிவகிரி ஐந்தாம் அரசர் நினைவு நாளுக்கு அன்னதானம் வழங்கும் செய்தி

இப்போது (பெரியண்ண பாண்டியன்) அவரது சகோதரர் முத்தரசனு பாண்டியன் , மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இனாமாக தந்துள்ளார்



ஆதாரம் 14:

வன்னியர் புகழப்படும் திருக்கைவளம் என்னும் நூல் கூடல் இருவாட்சி புலவரால் பாடப்பெற்றது . இதன் முதல் பாதிப்பு கிபி 1873 யில் பாண்டி நாட்டில் இருந்த பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி புரிந்து வந்த "அக்னி வம்ச சத்ரிய வன்னிய மஹாராஜா கட்டிய நயினார் ஆ.வை .தசவீர பூபதி " அவர்களால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது . இந்த நூலில் "சிவகிரி காதல் மற்றும் திக்கு விஜயம் " பற்றி செய்திகள்


 சிவகிரி பாளையம் பற்றி திருக்கைவளம் நூல் கூறுவது ,

 "தேவியுமையா ளமருஞ் சிவபுரியில் வந்தரசு
   மேவி சிவன் றாள்பரவும் மேன்மைக்கை "

உமையாள் ஆட்சி புரியும் மதுரையம்பதிக்கு வந்து சிவபெருமானின் திருவடியினை தொழும் சிறப்பை உடையவர்கள் பாண்டியர்களின் சிற்றரசர்களாக விளங்கியவர்கள் சிவகிரி அரசு .

இன்றும் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் "அக்னிகுல சத்ரிய வன்னிய வம்சத்தாரால் " அங்கு ஐப்பசி பவுர்ணமி பூசை நடத்தப்படுகிறது .இப்பழக்கம் தொன்று தொட்டு வரும் ஒரு நிகழ்வாகும் . சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை என்று வன்னிய சமஸ்தானத்து பாளையக்காரர்களால் நடத்தப்பட்ட ஒன்று .. இன்றும் அவர்களின் வாரிசுகளும் , அந்த சமஸ்தானத்து வன்னிய மக்களும் இதனை செய்கிறார்கள் ..






ஆதாரம் 15:

பாண்டியரால் முதன்முதலில் தரப்பட்ட நிலம் சுண்டன்குளம் . இங்கு குடியேறிய வன்னியர்கள் பின்னாளில் தென் மலைக்கும் சிவகிரிக்கும் சென்றனர் என்பதை பார்த்தோம் .

இந்த சுண்டன்குளம் கோவில் இந்த அங்காளபரமேஸ்வரி கோவில்தான் . இது தெளிவாக "அக்னி குல சத்ரிய வன்னிய சமூகத்துக்கு பாத்தியப்பட்டது  " என்கிறது





இங்கு தென்மலை ஜமீன் வம்சத்தை சேர்ந்தவரும் , எனது நண்பருமான அண்ணன் "வீரபாண்டிய வன்னியனார் " அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற வன்னியர் சங்க கூட்டம் . இவர் தற்போதைய சிவகிரி ஜமீன் விக்னேஷ் ராஜாவிற்கு அண்ணன் முறை . தென்மலை சமஸ்தானத்தை சேர்ந்தவர்

இந்த கோவிலில் நடந்த கூட்டம் இது




 வீரபாண்டிய வன்னியனார் அவர்கள் போனவருடம்  ஒரு கேலண்டரையும் உருவாக்கினார் சிவகிரி மன்னரின் படத்துடன் , அங்குள்ள வன்னியர்களுக்காக


ஆதாரம் 16:

சிவகிரியின் ஆதிக்குடியாக விளங்கும் தென்மலை ஜமீனின் சார்பாக அண்ணன் திரு.பெரியண்ண பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் வன்னியனார் ஆகியோர் எல்லாம் சேர்ந்து ஜமீனின் வாரிசுகள் எல்லாம் சேர்ந்து நினைவு அஞ்சலை செலுத்தியுள்ளனர்

கலப்பு திருமணம் ஆன பிறகு உருவான ஒரு சாதிவிகத்தத்தை தவிர மிச்சம் உள்ள 99% ஜமீன் குடும்பத்தினரும் வன்னியர் சாதியினர் என்ற ஓரணியில் ஒற்றுமையுடன் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் .
அதன் புகைப்படங்கள் இதோ





செண்பகவல்லி ஆணை பற்றிய குமுதம் பேட்டிக்கு, திரு வீரபாண்டிய வன்னியனார் அவர்களே பேட்டியளித்திருந்தார் . அதில் அவர் சிவகிரி சமஸ்தானத்தின் உறவினராக பதிவு செய்திருந்தனர் 
ஆதாரம் 17:

கும்பகோணத்தில் "தமிழ் மன்னர் குல சங்கம் "என்ற பெயரில் வன்னிய அமைப்பு இயங்கி வந்தது . அதில் 1930 களிலேயே அங்கு நடந்த வன்னியர் குல சத்ரிய சங்க மாநாட்டில் "பிற்கால சோழ பாண்டியர் " வரலாறு எழுதியவரும் , "வரலாற்று புலி " என்றும் அறியப்படும் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்
சிவகிரி , ஏழாயிரம் பண்ணை , அழகாபுரி போன்ற பாண்டிய அரசுகள் நம் வன்னியர் அரசு என்று பெருமையுடன் அப்போதே உரையாற்றியுள்ளார்



ஆதாரம் 18:

ஏழாயிரம் பண்ணை கைபீது

ஏழாயிரம் பண்ணை கைபீது தெளிவாக இவர்களை அக்னி குலத்தவர் என்று சொல்கிறது .

அதாவது இவர்கள் பாண்டிய மன்னரை சந்திக்க செல்லும்போது , பாண்டியன் இவர்கள் "அக்னி குலத்தவர் என்று அறிந்ததால் " தனக்கு இணையானவர்கள் என்று சொல்லி சரிசமமான பீடம் அளித்தான் அமர என்பதாகும் .

அக்னி குலத்தான் என்பதை நிரூபிக்க இவர்களை "அக்னிகுதிரை ஏறி " நிரூபிக்க சொல்ல அவர்களும் அதை செய்துள்ளனர்







 

இதே போல அக்னிகுதிரை எரிய அக்னிகுலத்து வன்னிய அரசர்கள் சீர்காழியிலும் இருக்கிறார்கள் . அவர் பெயர் "இவர் பெயர் “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார்"

இவரின் புகைப்படம்



ஆதாரம் 20:

சிவகிரி வன்னியர்களை நேரடியாக பள்ளிகள் என்று இன்னொரு நூலிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் 

INDIAN ANTIQUARY vol XLIII-1914 




ஆதாரம் 21:


தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு என்னும் நூலை எழுதிய தொல்லியல்துறை இயக்குனர் திரு நடன.காசிநாதன் அவர்கள் இவர்கள் வன்னியர்கள் என்பதை காலத்தில் நேரடியாக சிவகிரி, ஏழாயிரம்பண்ணை , தென்மலை அரசியார்களிடம் நேர்காணல் செய்து உறுதிப்படுத்திய பின்பே இதனை வெளியிட்டார் .. 

அவர் நேர்காணல் செய்த புகைப்படங்கள் இதோ 







ஆதாரம் 22:


தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் என்ற இலங்கை நூலை எழுதியவர் இலங்கை தமிழரான வெல்லவூர் கோபால் ஆவார் . இவரும் தென்தமிழ்நாட்டில் வன்னியர் ஆட்சி செய்த பாளையங்களை பதிவு செய்துள்ளார் 


ஆதாரம் 23:


சிவகிரி பற்றிய வழக்கு நடக்கும்பொழுது , மறவரின் கலக்காத வாரிசுதாரர்கள் இந்த ஜமீன் வன்னிய குலத்தை சேர்ந்தது என்பதனை மாலைமலர் , தினமலர் , தந்தி போன்ற ஊடங்கங்களுக்கு அளித்த பேட்டி வந்த செய்தி 







ஆதாரம் : 24

கேரள அரசு ஆவணக்  காப்பகத்தில்  உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில்  பாண்டிய நாட்டில்  "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :

பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . 

அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் . 

புலியைக் கொன்றதால் பெற்ற விருது : 

பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு 

“மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ” 

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும் 

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு  தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் . 

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் : 

அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது . 

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் : 

பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் . 

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் . 

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் : 

இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில் 

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ” 

என்று குறிப்பிட்டுள்ளது . 

வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது 

“-------------- மெச்சு பண்ணை 
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக் 
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை “

என்பது அதிலுள்ள பாடல் வரிகள் . 

அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் . 

திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள் 

"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது " 

என்று எழுதிருக்கிறார் . 

தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :

தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும்  நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .  

ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .

மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .

ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது . 

நூல்  : 
நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள் 
பக்கம் :43

ஆதாரம் 25:


"வரகுணராமபுரம்*
வன்னியனார், அரசியார் பட்டங்கள்
தென்பாண்டிநெல்லை சீமையில் 
வன்னியர் மட்டும் வாழும் ஊராகும்.

இவ்வூர் சிவகிரி,தென்மலை,அளகாபுரி ஜமீன் உறவினர்கள் தங்களின் முன்னோர் 'வரகுணராமபாண்டியன் பெயரை கொண்ட ஊராகும்.

இங்கு வன்னியர் வன்னியனார்,சாமி என்றும்,பெண்கள் தாய்,அரசியார்,நாச்சியார் என்ற பட்டங்களுடன் அழைக்கப்படுகின்றனர்.

அங்கு நடைபெற உள்ள திருமண பத்திரிக்கை


ஆதாரம் 26:


இவ்வளவு ஆதாரம் இருந்தும் மீண்டும் மீண்டும் உண்மைக்கு புறம்பாக பேசுபவர்களுக்கு உரிய ஆதாரம் தந்து தெளிய வைக்கவே இந்த வீடியோ கோப்பு . சமீபத்தில் மறைந்த தெற்கத்திய வன்னிய பாளையத்தின் வயதானவரும் , தென்மலை அரசியாருமான "பாக்கியத்தாய் துரைச்சியார்" அவர்களின் பேட்டி. 
  
இவர் சிவகிரி ஜமீன்தாரின் உடன்பிறந்த தம்பியின் மனைவி ஆவார் 




ஆதாரம் 27:

அடுத்த வீடியோ இது . இவர் சிவகிரி ராசாவின் மகள் ஆவார் . அதாவது மறவர் சமூகத்தில் மணவுறவு கொண்ட சமிந்தாரின் தங்கை ஆவார் . இவர் அழகாபுரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்து கொண்டவர்

இவரின் பேட்டி இதோ 






சிவகிரி வன்னியர்கள் சிறப்பு :

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் (செம்மநாட்டு மறவர்) வந்தால் புதுக்கோட்டை தொண்டைமான், சிவகங்கை அரசர் மற்றும் தஞ்சை பகுதியில் உள்ள 18 நாட்டார்களும் வணங்கி நிற்க வேண்டும்

வீரபாண்டிய கட்டபொம்மன் , கூடல் குடையின் சேருமலை நாயக்கன் மற்றும், தொட்டியர்கள் (கம்பளத்தார்) படுத்து வணங்கவேண்டும். பின்பு எழுந்தாலும் உட்கார கூடாது

ஆனால் வன்னியர்களான சிவகிரி, ஏழாயிரம் பண்ணை அரசர்கள் , மற்றும் மறவர் தலைவன் கோட்டை அரசர் , ஊத்துமலை, வடகரை, சேத்தூர், சொக்கம்பட்டி மற்றும் எட்டையபுரம் நாயக்க அரசர் எந்தவித வணக்கமும் செலுத்தாமல் சரிக்குசமமாக இருப்பார்கள்

ஆனால் இந்த வன்னிய அரசர்கள் சேதுபதியை பார்க்க வந்தால் மரியாதை நிமித்தமாக சேதுபதியார் எழுந்து வரவேறப்பார்









தென்பகுதி ஆண்ட அழகாபுரி ஜமீன்தார்கள் 1942 பத்திரம்
இங்குதான் சிவகிரி ஜமீன்தார் மகளார் திருமணம் செய்தார்
செந்தட்டி காளை பாண்டியன் சின்னத்தம்பியார் அவர்கள் குமாரர்
"அக்கினி குல க்ஷத்ரியர் " என்று கூறும் பத்திரம்
2020 யில் யார் என்ன சான்றிதழ் வாங்கினாலும்... யார் எந்த சபையில் மெம்பர் ஆனாலும் இந்த ஆவணம் இந்த ஜமீன் உருவானது வன்னியர்களிடம் என்பதை தெரிவிக்கும். இந்த பெயரில் சான்றிதழ் வாங்குவது வன்னியர் மட்டுமே..



இன்னும் பல செய்திகள் இருக்கிறது .. முடிந்த அளவிற்கு பதிவு செய்துள்ளேன் . மேலும் தெரிந்துகொள்ள "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் " நூலை படிக்கலாம் .. பாத்திரங்கள் உட்பட பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளது

பல்லவம் முதல் ஈழம் வரை வன்னியர் சிந்திய குருதி இம்மக்களை காத்திடவே .

நன்றி 

10 comments:

  1. இப்ப தான் எனக்கு தென் தமிழ்நாட்டில் வன்னியர் இருப்பது தெரிந்தது.

    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நீங்க வேற லெவல்.
      உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வீர வன்னிய மகாராஜர் துணைநிற்கட்டும்.
      வன்னிய மக்களின் அறியாமையை போக்க இப்பணி அவசியம் தேவையே!

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Thats total of 27 proofs. OMG! You are proving you are real kshatriya.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. sema super anna na ramanathapuram mavattam

    ReplyDelete
  6. vanniars are living in many areas of tirunelveli/tenkasi Dt. Puliangudi, Kumanthapuran, kadayanallur, tenkasi, Ilanji, Aykudi, Sundarapandiapuram, Ambasamuthiram, VK Puram etc.... I am living in Puliangudi..

    ReplyDelete



  7. வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மறவர், கள்ளர், வன்னியர் மற்றும் கவுண்டர் சாதிகள் உட்பட ஒவ்வொரு தமிழ் சாதிகளுக்கும் தலைவர்களாக பாணா இராச்சியத்தைச் சேர்ந்த தெலுங்கு வாணாதிராயர்களையும் லிங்காயத் பலிஜாக்களையும் நியமித்தனர். வாணாதிராயர்களுக்கு வன்னியர், வாணடியார், குலசேகர, பலிஜா, பாண்டிய உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள் இருந்தன. கி.பி 1736க்குப் பிறகு மதுரை நாயக்கர் முடிவுக்கு வந்தபோது பெரும்பாலான வாணாதிராயர்கள் உள்ளூர் சாதிகளுடன் கலந்து மறவர், கள்ளர் அல்லது கவுண்டர் என்று வேடமிட்டனர். கௌண்டர்களில் வாணவராயர் மற்றும் லிங்காய கவுண்டர்கள் காணப்படுகின்றனர். மறவர், கள்ளர் மற்றும் வெள்ளாளர் போன்ற பெரும்பாலான நாக சாதியினர்களில் சில வாணாதிராயர் அல்லது வன்னியர்களைக் கொண்டுள்ளனர். வன்னியர் என்பது வில்லவர் மற்றும் பாண குலத்தின் பட்டப்பெயர். வன்னியர் என்பது தமிழ்நாட்டின் நாக குலங்களின் பட்டப்பெயர் அல்ல.

    பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வந்த பிறகு, பாளையக்காரரின் கைகளில் கையீது எனப்படும் ஏராளமான செப்புத் தகடு மானியங்கள் தோன்றின. பாளையக்காரர் இந்த கையீதுகளை தங்கள் கூற்றுகளை நிரூபிக்க பயன்படுத்தினார். சுவாரஸ்யமாக, கையீதுகளில் பலர் தங்களை பாளையக்காரராக நியமித்த விஜயநகர நாயக்கர்களைக் குறிப்பிடவில்லை. பெரும்பாலான பாளையக்காரர்கள் பாண்டிய மன்னர்களால் நியமிக்கப்பட்டதாகக் காட்டிக் கொண்டனர். கையீது செப்புத் தகடுகள் உண்மையான வரலாற்று ஆவணங்கள் அல்ல.

    உண்மையில் பாளையக்காரர்கள் பாண்டிய வம்சத்தின் எதிரிகளாக இருந்த வாணாதிராயர்களே. மறவர் உதவியுடன் வாணாதிராயர்கள் பாண்டிய வம்சத்தை கொன்றனர். வாணாதிராயர் ஒருவர் தன்னை "பாண்டியகுலாந்தகன்" அதாவது பாண்டிய குலத்தை அழித்தவர் என்று அழைத்துக் கொண்டார். பாளையக்காரருடன் உள்ள செப்புத் தகடுகள் சந்தேகத்திற்குரிய தோற்றம் கொண்டவை. செப்புத் தகடுகளைப் பயன்படுத்தி வாணாதிராயர்கள் பாண்டிய நாட்டின் பழங்கால குடிமக்களாக வேடமணிந்தனர். ஆனால் பெரும்பாலான பாளையக்காரர்கள் கி.பி 1529 இல் கடைசி பாண்டிய ஆட்சியாளர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்ற பிறகு மட்டுமே விஸ்வநாத நாயக்கரால் நியமிக்கப்பட்டனர்.

    .

    ReplyDelete
  8. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    ReplyDelete
  9. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete