பாண்டிய
மன்னர்கள் காலம் முதல் தென்
தமிழகத்தில் ஆட்சியுரிமை பெற்று அதன் பிறகு
விஜயநகர அரசின் காலத்தில் பாளையக்காரர்களாகவும்
செயல்பட்ட வன்னிய அரசு சில
இருந்தன.
தென் தமிழ்நாட்டின் மதுரையில் ஆட்சி புரிந்த நாயக்க
மன்னர்கள் அப்பகுதியில் சிறந்து விளங்கிய சிலர்
தலைமையில் பாளையங்களை ஏற்படுத்தி தம் அரசுக்கு பாதுகாப்பு
நல்க வழிவகை செய்தனர் . அவ்வாறு
வன்னியர்கள் தலைவர்களாக நியமிக்க பெற்ற பாளையங்கள்
தென்மலை
(சிவகிரி )
அளகாபுரி
ஏழாயிரம் பண்ணை
ஆத்திப்பட்டு
சமுசிகாபுரம்
வேப்பங்குளம்
பன்னீராயிரம் பண்ணை
அளகாபுரி
ஏழாயிரம் பண்ணை
ஆத்திப்பட்டு
சமுசிகாபுரம்
வேப்பங்குளம்
பன்னீராயிரம் பண்ணை
ஆகியவையாகும்
. இந்த ஏழு வன்னியர் பாளையங்களும்
அதிக வருவாய் ஈட்டியதும் , ஆங்கிலேயரை
எதிர்த்து போரிட்டதிலும் முன்னனணியில் இறந்தது சிவகிரி பாளையம்
ஆகும் .
இன்றைய நிலையில் சிவகிரி பாளையம் பற்றி பேசினால் , அது வன்னியர் சமூகத்தது இல்லை எங்களுடையது என்கின்றனர் மறவர் சமூகத்தவர் .
அதனை பற்றி பார்க்கும் முன்பு முதலில் சிவகிரி பாளையம் பற்றியும் அது உருவான செய்தியையும் பார்த்துவிடுவோம்
அதனை பற்றி பார்க்கும் முன்பு முதலில் சிவகிரி பாளையம் பற்றியும் அது உருவான செய்தியையும் பார்த்துவிடுவோம்
விஜயநகர அரசின்
காலத்துக்கு முன்பே பாண்டிய அரசுகளாக ஆட்சி செய்ய ஆரம்பித்து பின் விஜயநகர அரசின் காலத்தில் தென்மலை
யில் ஆட்சி செய்ய தொடங்கி , அதன் பின் எவ்வாறு சிவகிரிக்கு வந்தார்கள் என்று
இப்போது பார்ப்போம் .
சிவகிரி முதலில் தென்மலை என்றுதான் இருந்தது . இன்றும் தென்மலையும் அதன் ஜமீன் குடும்பமும் இருக்கிறார்கள் . இவர்கள் அனைவரும் அழகாபுரி சமஸ்தானத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்ற ஒரு செய்தியும் உண்டு . ஆயினும் சிவகிரி தென்மலையில் இருந்து தனியாக ஒரு அரண்மனையை கட்டி ஆட்சிபுரிந்தவர்கள் . ஒரேய குடும்பத்தினர்தான் . தென்மலை ஜமீனின் ஒரு பிரிவினர் சிவகிரிக்கு செல்ல , மற்ற தென்மலை காரர்கள் தென்மலையிலேயே தன ஆட்சியை தொடர்ந்தனர்
சிவகிரி தென்மலை அழகாபுரி போன்ற வன்னிய அரசுகள் தென் தமிழ்நாட்டில் தோன்றியமை :
மதுரையை
ஆண்டு வந்த "ஜெய துங்க பாண்டியன்
" ஆணையின் பேரில் திருப்பூவணத்தை ஆட்சி
செய்து வந்த "தாஷ்டிக சுந்தர பாண்டிய
வன்னியனார் " ஒரு திருடனை அடக்கி
கொன்றதால் , பாண்டிய மன்னனால் பாராட்ட
பெற்று தென் தமிழ்நாட்டில் "சுண்டன்
குளம் " என்ற இடத்தை தலைமை
இடமாக கொண்டு ஆண்டுவரும்படி கட்டளையிட்டார்.
இது போல அளகாபுரியை ஆட்சி
செய்த பாளையக்காரர்களின் தொடக்கத்திற்கும் இது போன்ற ஒரு
செய்தி காணப்பெறுகிறது .
"அந்நாளில்
பாண்டிய அரசர் 'தாஷ்டிக சவுந்தர
பாண்டிய வன்னியனாரை' அழைத்து தெற்கில் "சுண்டன்
" என்ற ஒருவன் சிறு கூட்டத்தை
சேர்த்துக்கொண்டு தொல்லைகள் தருவதாகவும் , அவனை வன்னியனாரும் அவன்
பிள்ளைகளும் ஒடுக்கி வர வேண்டும்
என்று கட்டளையிட்டார் . அதன் பிரகாரம் தென்
சீமை சென்று சுண்டன் என்பவனை
ஒடுக்கி மதுரையில் வந்து அரசனை கண்டதால்
, மன்னர் மகிழ்ந்து தென்சீமைக்கு சென்று ஆட்சி செய்யுங்கள்
என்று கூறி பல விருதும்
வெகுமதியும் அளித்து பட்டமும் கட்டி
அனுப்பினார் " என்பதே அந்த செய்தி
.
தாஷ்டிக
சவுந்திர பாண்டியனார் , பாண்டிய மன்னர் தென்சீமையில்
அளித்த பகுதியில் தம் பிள்ளைகளில்
ஒருவரை அவனியங்கோன் ஏந்தலிலும்
ஒருவரை அச்சந்த விளத்தானிலும்
ஒருவரை புத்தூரிலும்
ஒருவரை தென்மலையிலும்
ஒருவரை திருவேங்கடத்திலும்
அமர்த்தி
ஆண்டு வரும்படி செய்தார் என்பதாகும் .
மேற்கூறப்பட்ட
தாஷ்டிக சவுந்தர பாண்டியனார் மற்றும்
பாண்டிய மன்னர் சார்ந்த செய்திகள்
, இந்த சமஸ்தானத்து வாரிசுகளால் கூறப்பட்டு அதனை அப்போதைய தொல்லிய
இயக்குனர் திரு . நடன காசிநாதன்
அவர்கள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்
.
இந்த நூலை எழுத உதவியவர்கள் யார் என்ற செய்தியையும் இந்த கட்டுரையின் முடிவில் தருகிறேன்
இதில் சொல்லப்படும் சுண்டன் என்னும் கலகக்காரன் இருந்த பகுதி இப்போதைய சுண்டன்குளம் என்றும் , அப்பகுதிதான் முதன்முதலில் தாஷ்டீக சுந்தர் பாண்டிய வன்னியர் ஆட்சி புரிந்து , அதன் பிறகு அங்கிருந்து தென்மலையை தலைநகராக கொண்டு ஆட்சியை தொடங்கியுள்ளனர் .
சிவகிரி பாளையக்காரர்களின் மரபு வழி பட்டியலில் கிபி 1916 ஜூலை திங்கள் 24-ஆம் நாள் திருத்தம் செய்து அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது .
அப்பட்டியலில்
அரசுக்கு தெரிந்த முதல் பாளையக்காரராக
"விஜயரங்க வன்னியனார் " குறிப்பிடப்பட்டுள்ளனர் .
அடுத்ததாக
"சங்கரபாண்டிய வன்னியனாரும் ", மூன்றாவதாக "பெரிய சங்கு வன்னியனாரும் "
நான்காம் பாளையக்காரராக "வரகுணராம வன்னியனாரும் "
காணப் பெறுகின்றனர் .
நான்காம்
பாளையக்காரர் "வரகுணராம வன்னியனார் " அவர்களின்
தொடக்க கால ஆட்சி வரை
இவர்களின் தலைநகரம் தென்மலைதான் . கிபி
1733- யில் வரகுணராம வன்னியனார் இருந்திருக்கிறார்
. அவ்வாறெனில் அவருக்கு முன்பு ஆட்சி
செய்தவர்கள் அரசுக்கு தெரிந்த வகையில்
மூவர் இருந்துள்ளனர்
தென்மலையில்
ஆட்சி செய்த வரகுணராம வன்னியனார்
அவர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்
என்பது , அவர் மீது கடிகை
முத்து புலவரால் பாடப் பெற்ற
" திக்கு விஜயம் " என்னும் நூலாலும் , புகழேந்தி
புலவர் இயற்றிய "சிவகிரி காதல் " என்னும்
நூலாலும் புரிந்துகொள்ள முடிகிறது .
வடகரை பாளையக்காரருக்காக தென்மலை வன்னியனார் அவர்கள்
, திருமலை நாயக்கர் மந்திரி ஆறை
அழகப்ப முதலியார் அவர்களை கொலை செய்ததால்
, வடகரை பாளையக்காரர் சிவகிரி பகுதியில் தென்மலையாருக்கு
அரண்மனை கட்டி தருகிறார் .
தென்மலை
வன்னியனார் சிவகிரிக்கு வந்து ஆண்டு கொண்டிருக்கையில்
, அழகப்ப முதலியாரின் மகன் குமாராசாமி தளவாய்
சிவகிரி மீதி படையெடுத்து வரகுணராஜா
வன்னியனாரை கொலை செய்கிறார் .
அவரை பற்றிய பாடல்கள்
அவரை பற்றிய பாடல்கள்
சிவகிரியை
தலைநகரமாக கொண்டு வரகுண பாண்டிய
வன்னியனார் ஆண்டு வருகையில் , இம்மன்னன்
காஞ்சிபுரம் பிரம்மகுல அகோர சிவந்தபாதைமூருடையத் தேசிகரவர்களை
தரிசனம் செய்து திருநீறு பெற்று
வாழ்ந்து வரும் நாளையில் , அத்தேசிகர்
தென்காசி விசுவநாதசுவாமி சன்னதியில் மடத்ததிபராக வந்திருப்பதை அறிந்த மன்னர் , குருவுக்கு காணிக்கை செய்வதற்காக ஒரு
தரும சாசனம் வெளியிட்டுள்ளார் .
அதில் மன்னரின் மெய்க்கீர்த்தி - அரசுபதி
- வில்லி
- வன்னிய குலதிபதி
- அக்கினி கோத்திரத்தான்
- அக்னி குதிரை ஏறியவன் ( வன்னிய சமூகத்திற்கு தவிர இந்த வாக்கியம் வேறு யாருக்கும் இல்லை . குறிப்பாக முக்குலத்தில் யாருக்கும் இல்லை )
பெண்ணை வரை சம்பு வன்னியன்
காவிரி வரை வீறு வன்னியன்
சேது வரை கங்கை வன்னியன்
தில்லை கீள்பால் காளத்தி வரை இந்திரா வன்னியன்
இப்பட்டையம் தென்காசி செப்பு பட்டயம் / பன்னீராயிரம் செப்பு பட்டையம் என்ற பெயர்களில் வெளி வந்துள்ளது
தெற்கில் வன்னியர்கள் இல்லை என்பது மிகத்தவாறு . திண்டுக்கல் , நெல்லை , தூத்துகுடி அல்லாது கன்னியாகுமரி வரை வன்னியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அவர்கள் எண்ணிக்கைதான் கூடி குறையுமே தவிர . மக்களே இல்லை என்பது பொய்யான வாதம்
சரி இப்போது சிவகிரி பாளையம் வன்னியர்களுடையது என்பதை விளக்கும் சில ஆதாரங்களை பார்ப்போம்
ஆதாரம் 1:
தென்னிந்திய சாதியும் குலங்களும் என்ற நூலில் திரு.எட்கர் தர்ஸ்டன் அவர்கள் வன்னியர்களின் பாளையங்களாக குறிப்பிடும் பகுதிகள் . இப்பகுதிகளில் வன்னிய (PALLI) பெண்கள் இஸ்லாமியர்களை போல கோஷா முறையில் திருமணம் செய்வதாக குறிப்பிடுகிறார் . இன்றும் பிச்சாவரம் , அரியலூர் சமஸ்தானத்தில் வன்னிய ராஜ வம்ச பெண்கள் இதனை தொடர்கின்றனர் . ஆதாரம் 2:
திருநெல்வேலி கெசட்டில் அங்குள்ள பாளையங்கள் பற்றிய செய்திகள் இருக்கிறது . அதில் சிவகிரி பற்றி முதலில் பதிந்த செய்தி . இது வன்னியர் என்றும் பிறகு வன்னியரா ? வன்னிய மறவரா என்ற குழப்பத்திலேயே பதிந்தவர்கள்
கெசட்டின் இறுதியில் தெளிவாக " சிவகிரி பாளையக்காரர்கள் தம்மை "வன்னியர் மறவர் " என்று சொல்லி கொள்ளும் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் . வன்னியர் சாதியினர் என்று தெளிவாக பதிந்துள்ளனர் .
அதோடு அல்லாமல் அவர்கள் பாண்டிய மன்னரால் சுண்டன்குளத்தில் குடி அமர்த்தப்பட்டு , அதன் பிறகு தென்மலைக்கும் அதன் பிறகு சிவகிரிக்கும் சென்று ஆட்சி செய்த செய்தியையும் குறித்துள்ளனர்
ஆதாரம் 3:
history of the millitary transactions of the british nation in indostan என்ற நூலில் திரு. சாரமே அவர்கள் சிவகிரி சமஸ்தானத்தவர்கள் சாதியால் வன்னியர்கள் என்பதை குறித்துள்ளார்
ஆதாரம் 4:
வரகுணராமன்
புகழப்படும் "சிவகிரி காதல் " என்னும்
நூல்
"வன்னிய
குல தீப வரகுணராம பாண்டியன்
"
இந்நூல் சிவகிரி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி வாரிசுகளால் நேரடியாக நேர்க்காணல் செய்து எழுதப்பட்டு வெளியிடப்பட்ட " தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " நூலில் இருந்து
ஆதாரம் 5:
சிவகிரி
வன்னியர் சமூத்தவரே என்பதற்கு மேலும் சில செப்புப்பட்டையும்
சான்றாக அமைந்துள்ளது .
முதல் செப்புப்பட்டையும் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த
திரு .முனுசாமி நாயுடு அவர்களிடம்
இருந்து பெறப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை குற்றாலம் அகழ்வைப்பகத்தில்
வைத்து பாதுகாக்கப் படுகிறது ("வன்னியர் ", செப்பு பட்டயம் எண்
21)
வன்னியர்கள் பாலாறு பெண்ணையாறு முதல் சேது தெற்கு வரை ஆட்சி செய்தவர் என்பதும் கீழே உள்ள செப்பேட்டில் உள்ளது
அதே போல வரகுணராம பாண்டியனும்
காஞ்சிபுரம் சன்னதி மடத்தில் தீட்ச்சை
பெற்றவரே .
காஞ்சிபுரம்
முதல் கிழக்கிலும்
அங்கிகோட்டத்துக்கு மேற்கிலும்
தேவப்புரயாகை வடக்கிலும்
இராமநாதபுரத்துக்கு தெற்கிலும்
அங்கிகோட்டத்துக்கு மேற்கிலும்
தேவப்புரயாகை வடக்கிலும்
இராமநாதபுரத்துக்கு தெற்கிலும்
ஆக சிவகிரி ,அழகாபுரி , ஏழாயிரம்
பண்ணை ஆகியவை ராமநாதாபுரத்துக்கு
தெற்கில் உள்ளவையாகும்.
இவ்வன்னியர்கள்
"சம்புமாமுனி வேள்வியில் பிறந்து வாதாவி , இனத்தாவி
, இரத்தனகிரி முதலாகவுள்ள அகில சத்துரு நிவாரணம்
பண்ண , வீரசட்டை கட்டி , அக்னி
கொடி , புலிக்கொடி , சிங்கக்கொடி , அனுமக்கொடி , பஞ்சவர்ண விருது படைத்தவர்கள்
என்றும் கூறுகிறது .
ஆதலால் சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை ஆகியது வன்னிய பாளையம் என்பது தெளிவு .
ஆதலால் சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை ஆகியது வன்னிய பாளையம் என்பது தெளிவு .
Nelson manuel book –history of Madura region I think.
1874 யில்
பிறந்து 1964 யில் மறைந்த தேசிய
கவிஞர் சேலம் .அர்த்தநாரீஷ்வர்மா அவர்கள்
தாம்பாடியுள்ள ஒரு பாடலில் தமிழ்நாட்டில்
அரசு செய்த வன்னிய அரசுகளை
பற்றி பதிவு செய்துள்ளார் .
அர்த்தநாரீசவர்மா யார் ? ஏப்பேற்பட்டவர் அவர் ? இதற்கான பதிலும் நமக்கு தேவைதானே . ஆம் அவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கீழே
இவர் தம் க்ஷத்ரியர் என்னும் இதழில் எவையெல்லாம் வன்னிய அரசுகள் என்று 1900 -களிலேயே பதிவு செய்துள்ளார். அரியலூர் மழவர் , அழகாபுரி மற்றும் சிவகிரி பாண்டியர் ,பிச்சாவரம் சோழனார் , உடையார்பாளையம் , பரூர் கச்சிராயர் , ஊற்றாங்கால் வணங்காமுடியார் என்பதாகும்
ஆதாரம் 7:
இவர் தம் க்ஷத்ரியர் என்னும் இதழில் எவையெல்லாம் வன்னிய அரசுகள் என்று 1900 -களிலேயே பதிவு செய்துள்ளார். அரியலூர் மழவர் , அழகாபுரி மற்றும் சிவகிரி பாண்டியர் ,பிச்சாவரம் சோழனார் , உடையார்பாளையம் , பரூர் கச்சிராயர் , ஊற்றாங்கால் வணங்காமுடியார் என்பதாகும்
இது போல இன்னும் சில சொத்து சார்ந்த ஆவணங்களும் இருக்கின்றன .. அதில் சில செய்திகள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலில் ஜமீனின் ஆதரவுடன் பதியப்பட்டுள்ளது . அவை கீழே
இதே போல கருப்பாயி நாச்சியார் அவர்கள் எழுதி கொடுத்த கொடை களிலும் ஸ்த்ரீ வன்னியர் என்றே குறிப்பிடப்பட்டுளள்து
இதனுடைய பத்திர நகலும் இருக்கிறது .. அதில் பெண் என்பதற்கு ஸ்த்ரீ என்றும் ஜாதி வன்னியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆதாரம் 8:
மைனர் வரகுணராம பாண்டிய வன்னியனார் இறந்த பிறகு , அவரது பாட்டனார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் (பெரியவர் ), தம்பி வரகுண ராம பாண்டிய சின்னத்தம்பியாரின் (சிறியவர் ) பெயரன் செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் சிவகிரியில் இருந்து கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு 1914 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 21 யில் ஒரு விண்ணப்பம் அனுப்பியுள்ளார் . அவ்விண்ணப்பத்தில் 09-01-1914 அன்று இரவு 10.00 மணி அளவில் இயற்க்கை எய்து விட்ட சிவகிரி ஜமீன்தார் இராமலிங்க வரகுணராம பாண்டிய வன்னியனாருக்கு திருமணம் ஆகாமல் , குழந்தைகள் இல்லாததாலும் அச்சமீனுக்கு தாம்தான் உரிய வாரிசு என்றும் தமக்கு அச்சமீனை ஆளும் உரிமையும் சொத்தும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் .
நீதிமன்ற ஆவணங்கள்
" தான் உயிருள்ள வரை வன்னியராகவே இருப்பேன் " என்று பதிலடி தந்த செய்தி இது
சிவகிரி ஜமீன்தாரின் நினைவு நாளுக்கு , அவரின் நேரடி
வாரிசு என்றும் , அழகாபுரி இளவரசிக்கு பிறந்தவருமான குட்டிராஜா என்பவர் இவரின் தந்தையார் ..
அந்த ராஜாவுக்கு ஒரு மகளும் இருந்துள்ளார் .. இவர்கள் அனைவரும் இன்றும் சுத்தமான வன்னியர் சாதியிலேயே திருமணம் செய்துள்ளனர் ..
இவர்கள் நேரடி வாரிசுகள் என்று நினைவு அஞ்சலி செலுத்திய விளம்பர செய்தி
ஆதாரம் 9 :
வாரிசு என்றும் , அழகாபுரி இளவரசிக்கு பிறந்தவருமான குட்டிராஜா என்பவர் இவரின் தந்தையார் ..
அந்த ராஜாவுக்கு ஒரு மகளும் இருந்துள்ளார் .. இவர்கள் அனைவரும் இன்றும் சுத்தமான வன்னியர் சாதியிலேயே திருமணம் செய்துள்ளனர் ..
இவர்கள் நேரடி வாரிசுகள் என்று நினைவு அஞ்சலி செலுத்திய விளம்பர செய்தி
ஆதாரம் 9 :
சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .
இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .
வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .
இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "சங்கிலி வீரப்ப பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .
இந்த சங்கிலி வீரப்ப பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..
அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...
இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .
இருப்பினும் தென்மலை ,சமுசிகாபுரம் , அழகாபுரி மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .
சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..
கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..
நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி
சிவகியில் கலப்பு ஏற்படும் முன்பு வரை ஆட்சி செய்து இறந்த சுத்தமான வன்னிய சிவகிரி அரசர் இறந்தபோது அவருக்கு இறுதிகாரியம் செய்தது அவரின் மனைவி அழகாபுரி சமஸ்தானத்து இளவரசியார் .
இந்த அழகாபுரி இளவரசியின் மகன் தான் எமக்கு நீதிமன்ற ஆவணம் தந்து உதவியது .
அவரை பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன் .. இறுதி சடங்கு செய்த ஆவணம் இதோ கீழே ..
ஆதாரம் 11:
சிவகிரி அரசர்களின் சொத்து பாத்திரத்திலும் தெளிவாக " சத்ரிய வன்னியர் " என்றே குறிப்பிடப்படுகிறது . ஆண்டு 1932
வன்னியர் தவிர வேறு எவருக்குமே சாதி கெசட் "வன்னியர் " என்றோ " சத்ரிய வன்னியர் " என்றோ குறிப்பிடமாட்டார்கள் என்பதற்கு இந்திய அரசாங்கம் வெளியிட்ட ஆவணம் ஒரு ஆதாரம்
ஆதாரம் 12 :
சிவகிரி தென்மலை போன்றவைக்கு ஆதியாக விளங்கும் அழகாபுரி பற்றிய செய்தியிலும் அவர்கள் வன்னியர் என்றே குறிப்பிடப்படுகிறது
ஆதாரம் 13:
சிவகிரி தற்போதைய ராஜா அவர்கள் மட்டும் " வன்னியர் - மறவர் " கலப்பு ஆனாலும் , அவர்களின் உறவினர்கள் , மற்றும் தென்மலை அழகாபுரி போன்ற இதர ஜமீன்தார்கள் இன்னும் சுத்த வன்னியர்களாகவே தம்மை கருதுகிறார்கள் . வாழ்கிறார்கள் .
இவர் தற்போதைய சிவகிரி சேவுக பாண்டியர் என்னும் விக்னேஷ் ராஜாவிற்கு உறவினர் .. வன்னியர் சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்து வருபவர்
தென்மலை சமஸ்தானத்தத்தை சேர்ந்த வீரபாண்டிய வன்னியனார் அவர்களின் மகனின் சாதி சான்றிதழ்
இந்த வீரபாண்டியன் வேறு யாருமில்லை . சிவகிரியில் வாரிசு முடிந்து போக , சொத்துக்களை நாங்கள் பராமரிக்கின்றோம் என்று சொல்லி சிவகிரி ராசாவின் தம்பி மகன்கள் மூவர் தென்மலையில் இருந்து அப்போதைய கலக்கட்டருக்கு கடிதம் எழுதி உரிமை பெற்றனர் . அதனால் மூத்தவர் சிவகிரிக்கு சென்று ஆட்சி புரிய, அவரின் மகனே மறவரின் காதல் மணம் புரிந்தார் .
மற்றும் இருவர் தென்மலையிலேயே தங்கினார். இதில் மூன்றாமவர் மகனே வீரபாண்டிய வன்னியனார் . பங்காளி முறை இவர் .. இன்னும் சுத்த வன்னியராகவே இருக்கிறார்
தென்மலை ஜமீனின் வாரிசுகளாக அண்ணன் தம்பிகள் மொத்தம் நாலு பேர் . இதிலும் ஒருவரை தவிர மற்ற மூவரும் வன்னியரின் திருமணம் செய்தவர்கள் . ஒருவர் மட்டும் மறவரின் திருமணம் செய்தவர் . ஆனாலும் வன்னிய சமூக பற்றாளர் .
அவர் பெயர் பெரியண்ண பாண்டியன் . எனக்கு பல செய்திகளை கொடுத்து உதவியவர்
இவர் சிவகிரி ஐந்தாம் அரசர் நினைவு நாளுக்கு அன்னதானம் வழங்கும் செய்தி
இப்போது (பெரியண்ண பாண்டியன்) அவரது சகோதரர் முத்தரசனு பாண்டியன் , மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இனாமாக தந்துள்ளார்
ஆதாரம் 14:
வன்னியர் புகழப்படும் திருக்கைவளம் என்னும் நூல் கூடல் இருவாட்சி புலவரால் பாடப்பெற்றது . இதன் முதல் பாதிப்பு கிபி 1873 யில் பாண்டி நாட்டில் இருந்த பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி புரிந்து வந்த "அக்னி வம்ச சத்ரிய வன்னிய மஹாராஜா கட்டிய நயினார் ஆ.வை .தசவீர பூபதி " அவர்களால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது . இந்த நூலில் "சிவகிரி காதல் மற்றும் திக்கு விஜயம் " பற்றி செய்திகள்
மேவி சிவன் றாள்பரவும் மேன்மைக்கை "
உமையாள் ஆட்சி புரியும் மதுரையம்பதிக்கு வந்து சிவபெருமானின் திருவடியினை தொழும் சிறப்பை உடையவர்கள் பாண்டியர்களின் சிற்றரசர்களாக விளங்கியவர்கள் சிவகிரி அரசு .
இன்றும் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் "அக்னிகுல சத்ரிய வன்னிய வம்சத்தாரால் " அங்கு ஐப்பசி பவுர்ணமி பூசை நடத்தப்படுகிறது .இப்பழக்கம் தொன்று தொட்டு வரும் ஒரு நிகழ்வாகும் . சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை என்று வன்னிய சமஸ்தானத்து பாளையக்காரர்களால் நடத்தப்பட்ட ஒன்று .. இன்றும் அவர்களின் வாரிசுகளும் , அந்த சமஸ்தானத்து வன்னிய மக்களும் இதனை செய்கிறார்கள் ..
ஆதாரம் 15:
பாண்டியரால் முதன்முதலில் தரப்பட்ட நிலம் சுண்டன்குளம் . இங்கு குடியேறிய வன்னியர்கள் பின்னாளில் தென் மலைக்கும் சிவகிரிக்கும் சென்றனர் என்பதை பார்த்தோம் .
இந்த சுண்டன்குளம் கோவில் இந்த அங்காளபரமேஸ்வரி கோவில்தான் . இது தெளிவாக "அக்னி குல சத்ரிய வன்னிய சமூகத்துக்கு பாத்தியப்பட்டது " என்கிறது
இந்த கோவிலில் நடந்த கூட்டம் இது
ஆதாரம் 16:
சிவகிரியின் ஆதிக்குடியாக விளங்கும் தென்மலை ஜமீனின் சார்பாக அண்ணன் திரு.பெரியண்ண பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் வன்னியனார் ஆகியோர் எல்லாம் சேர்ந்து ஜமீனின் வாரிசுகள் எல்லாம் சேர்ந்து நினைவு அஞ்சலை செலுத்தியுள்ளனர்
கலப்பு திருமணம் ஆன பிறகு உருவான ஒரு சாதிவிகத்தத்தை தவிர மிச்சம் உள்ள 99% ஜமீன் குடும்பத்தினரும் வன்னியர் சாதியினர் என்ற ஓரணியில் ஒற்றுமையுடன் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் .
அதன் புகைப்படங்கள் இதோ
செண்பகவல்லி ஆணை பற்றிய குமுதம் பேட்டிக்கு, திரு வீரபாண்டிய வன்னியனார் அவர்களே பேட்டியளித்திருந்தார் . அதில் அவர் சிவகிரி சமஸ்தானத்தின் உறவினராக பதிவு செய்திருந்தனர்
கும்பகோணத்தில் "தமிழ் மன்னர் குல சங்கம் "என்ற பெயரில் வன்னிய அமைப்பு இயங்கி வந்தது . அதில் 1930 களிலேயே அங்கு நடந்த வன்னியர் குல சத்ரிய சங்க மாநாட்டில் "பிற்கால சோழ பாண்டியர் " வரலாறு எழுதியவரும் , "வரலாற்று புலி " என்றும் அறியப்படும் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்
சிவகிரி , ஏழாயிரம் பண்ணை , அழகாபுரி போன்ற பாண்டிய அரசுகள் நம் வன்னியர் அரசு என்று பெருமையுடன் அப்போதே உரையாற்றியுள்ளார்
ஆதாரம் 18:
ஏழாயிரம் பண்ணை கைபீது
ஏழாயிரம் பண்ணை கைபீது தெளிவாக இவர்களை அக்னி குலத்தவர் என்று சொல்கிறது .
அதாவது இவர்கள் பாண்டிய மன்னரை சந்திக்க செல்லும்போது , பாண்டியன் இவர்கள் "அக்னி குலத்தவர் என்று அறிந்ததால் " தனக்கு இணையானவர்கள் என்று சொல்லி சரிசமமான பீடம் அளித்தான் அமர என்பதாகும் .
அக்னி குலத்தான் என்பதை நிரூபிக்க இவர்களை "அக்னிகுதிரை ஏறி " நிரூபிக்க சொல்ல அவர்களும் அதை செய்துள்ளனர்


இதே போல அக்னிகுதிரை எரிய அக்னிகுலத்து வன்னிய அரசர்கள் சீர்காழியிலும் இருக்கிறார்கள் . அவர் பெயர் "இவர் பெயர் “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார்"
இவரின் புகைப்படம்
ஆதாரம் 20:
சிவகிரி வன்னியர்களை நேரடியாக பள்ளிகள் என்று இன்னொரு நூலிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்
INDIAN ANTIQUARY vol XLIII-1914
ஆதாரம் 21:
தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு என்னும் நூலை எழுதிய தொல்லியல்துறை இயக்குனர் திரு நடன.காசிநாதன் அவர்கள் இவர்கள் வன்னியர்கள் என்பதை காலத்தில் நேரடியாக சிவகிரி, ஏழாயிரம்பண்ணை , தென்மலை அரசியார்களிடம் நேர்காணல் செய்து உறுதிப்படுத்திய பின்பே இதனை வெளியிட்டார் ..
அவர் நேர்காணல் செய்த புகைப்படங்கள் இதோ
ஆதாரம் 22:
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் என்ற இலங்கை நூலை எழுதியவர் இலங்கை தமிழரான வெல்லவூர் கோபால் ஆவார் . இவரும் தென்தமிழ்நாட்டில் வன்னியர் ஆட்சி செய்த பாளையங்களை பதிவு செய்துள்ளார்
சிவகிரி பற்றிய வழக்கு நடக்கும்பொழுது , மறவரின் கலக்காத வாரிசுதாரர்கள் இந்த ஜமீன் வன்னிய குலத்தை சேர்ந்தது என்பதனை மாலைமலர் , தினமலர் , தந்தி போன்ற ஊடங்கங்களுக்கு அளித்த பேட்டி வந்த செய்தி
ஆதாரம் : 24
கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் பாண்டிய நாட்டில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :
பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது .
அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .
புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு
“மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”
என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்
மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .
காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.
இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .
குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .
மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .
ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்
“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”
என்று குறிப்பிட்டுள்ளது .
வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது
“-------------- மெச்சு பண்ணை
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக்
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை “
என்பது அதிலுள்ள பாடல் வரிகள் .
அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் .
திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள்
"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது "
என்று எழுதிருக்கிறார் .
தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :
தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும் நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .
ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .
மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .
ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது .
நூல் :
நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43
ஆதாரம் 25:
"வரகுணராமபுரம்*
வன்னியனார், அரசியார் பட்டங்கள்
தென்பாண்டிநெல்லை சீமையில்
வன்னியர் மட்டும் வாழும் ஊராகும்.
வன்னியர் மட்டும் வாழும் ஊராகும்.
இவ்வூர் சிவகிரி,தென்மலை,அளகாபுரி ஜமீன் உறவினர்கள் தங்களின் முன்னோர் 'வரகுணராமபாண்டியன் பெயரை கொண்ட ஊராகும்.
இங்கு வன்னியர் வன்னியனார்,சாமி என்றும்,பெண்கள் தாய்,அரசியார்,நாச்சியார் என்ற பட்டங்களுடன் அழைக்கப்படுகின்றனர்.
அங்கு நடைபெற உள்ள திருமண பத்திரிக்கை
ஆதாரம் 26:
இவ்வளவு ஆதாரம் இருந்தும் மீண்டும் மீண்டும் உண்மைக்கு புறம்பாக பேசுபவர்களுக்கு உரிய ஆதாரம் தந்து தெளிய வைக்கவே இந்த வீடியோ கோப்பு . சமீபத்தில் மறைந்த தெற்கத்திய வன்னிய பாளையத்தின் வயதானவரும் , தென்மலை அரசியாருமான "பாக்கியத்தாய் துரைச்சியார்" அவர்களின் பேட்டி.
இவர் சிவகிரி ஜமீன்தாரின் உடன்பிறந்த தம்பியின் மனைவி ஆவார்
ஆதாரம் 27:
அடுத்த வீடியோ இது . இவர் சிவகிரி ராசாவின் மகள் ஆவார் . அதாவது மறவர் சமூகத்தில் மணவுறவு கொண்ட சமிந்தாரின் தங்கை ஆவார் . இவர் அழகாபுரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்து கொண்டவர்
இவரின் பேட்டி இதோ
ராமநாதபுரம் சேதுபதி மன்னர் (செம்மநாட்டு மறவர்) வந்தால் புதுக்கோட்டை தொண்டைமான், சிவகங்கை அரசர் மற்றும் தஞ்சை பகுதியில் உள்ள 18 நாட்டார்களும் வணங்கி நிற்க வேண்டும்
வீரபாண்டிய கட்டபொம்மன் , கூடல் குடையின் சேருமலை நாயக்கன் மற்றும், தொட்டியர்கள் (கம்பளத்தார்) படுத்து வணங்கவேண்டும். பின்பு எழுந்தாலும் உட்கார கூடாது
ஆனால் வன்னியர்களான சிவகிரி, ஏழாயிரம் பண்ணை அரசர்கள் , மற்றும் மறவர் தலைவன் கோட்டை அரசர் , ஊத்துமலை, வடகரை, சேத்தூர், சொக்கம்பட்டி மற்றும் எட்டையபுரம் நாயக்க அரசர் எந்தவித வணக்கமும் செலுத்தாமல் சரிக்குசமமாக இருப்பார்கள்
ஆனால் இந்த வன்னிய அரசர்கள் சேதுபதியை பார்க்க வந்தால் மரியாதை நிமித்தமாக சேதுபதியார் எழுந்து வரவேறப்பார்
தென்பகுதி ஆண்ட அழகாபுரி ஜமீன்தார்கள் 1942 பத்திரம்
இங்குதான் சிவகிரி ஜமீன்தார் மகளார் திருமணம் செய்தார்
செந்தட்டி காளை பாண்டியன் சின்னத்தம்பியார் அவர்கள் குமாரர்
"அக்கினி குல க்ஷத்ரியர் " என்று கூறும் பத்திரம்
2020 யில் யார் என்ன சான்றிதழ் வாங்கினாலும்... யார் எந்த சபையில் மெம்பர் ஆனாலும் இந்த ஆவணம் இந்த ஜமீன் உருவானது வன்னியர்களிடம் என்பதை தெரிவிக்கும். இந்த பெயரில் சான்றிதழ் வாங்குவது வன்னியர் மட்டுமே..
இன்னும் பல செய்திகள் இருக்கிறது .. முடிந்த அளவிற்கு பதிவு செய்துள்ளேன் . மேலும் தெரிந்துகொள்ள "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் " நூலை படிக்கலாம் .. பாத்திரங்கள் உட்பட பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளது
பல்லவம் முதல் ஈழம் வரை வன்னியர் சிந்திய குருதி இம்மக்களை காத்திடவே .
நன்றி






















































