பாண்டிய மன்னர்கள் காலம் முதல் தென் தமிழகத்தில் ஆட்சியுரிமை பெற்று அதன் பிறகு விஜயநகர அரசின் காலத்தில் பாளையக்காரர்களாகவும் செயல்பட்ட வன்னிய அரசு சில இருந்தன.
தென் தமிழ்நாட்டின் மதுரையில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள் அப்பகுதியில் சிறந்து விளங்கிய சிலர் தலைமையில் பாளையங்களை ஏற்படுத்தி தம் அரசுக்கு பாதுகாப்பு நல்க வழிவகை செய்தனர் . அவ்வாறு வன்னியர்கள் தலைவர்களாக நியமிக்க பெற்ற பாளையங்கள்
தென்மலை (சிவகிரி )
அளகாபுரிஏழாயிரம் பண்ணை
ஆத்திப்பட்டு
சமுசிகாபுரம்
வேப்பங்குளம்
பன்னீராயிரம் பண்ணை
ஆகியவையாகும் . இந்த ஏழு வன்னியர் பாளையங்களும் அதிக வருவாய் ஈட்டியதும் , ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதிலும் முன்னனணியில் இறந்தது சிவகிரி பாளையம் ஆகும் .
இன்றைய நிலையில் சிவகிரி பாளையம் பற்றி பேசினால் , அது வன்னியர் சமூகத்தது இல்லை எங்களுடையது என்கின்றனர் மறவர் சமூகத்தவர் . அதனை பற்றி பார்க்கும் முன்பு முதலில் சிவகிரி பாளையம் பற்றியும் அது உருவான செய்தியையும் பார்த்துவிடுவோம்
விஜயநகர அரசின் காலத்துக்கு முன்பே பாண்டிய அரசுகளாக ஆட்சி செய்ய ஆரம்பித்து பின் விஜயநகர அரசின் காலத்தில் தென்மலை யில் ஆட்சி செய்ய தொடங்கி , அதன் பின் எவ்வாறு சிவகிரிக்கு வந்தார்கள் என்று இப்போது பார்ப்போம் .
சிவகிரி முதலில் தென்மலை என்றுதான் இருந்தது . இன்றும் தென்மலையும் அதன் ஜமீன் குடும்பமும் இருக்கிறார்கள் . இவர்கள் அனைவரும் அழகாபுரி சமஸ்தானத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்ற ஒரு செய்தியும் உண்டு . ஆயினும் சிவகிரி தென்மலையில் இருந்து தனியாக ஒரு அரண்மனையை கட்டி ஆட்சிபுரிந்தவர்கள் . ஒரேய குடும்பத்தினர்தான் . தென்மலை ஜமீனின் ஒரு பிரிவினர் சிவகிரிக்கு செல்ல , மற்ற தென்மலை காரர்கள் தென்மலையிலேயே தன ஆட்சியை தொடர்ந்தனர்
சிவகிரி தென்மலை அழகாபுரி போன்ற வன்னிய அரசுகள் தென் தமிழ்நாட்டில் தோன்றியமை
மதுரையை ஆண்டு வந்த "ஜெய துங்க பாண்டியன் " ஆணையின் பேரில் திருப்பூவணத்தை ஆட்சி செய்து வந்த "தாஷ்டிக சுந்தர பாண்டிய வன்னியனார் " ஒரு திருடனை அடக்கி கொன்றதால் , பாண்டிய மன்னனால் பாராட்ட பெற்று தென் தமிழ்நாட்டில் "சுண்டன் குளம் " என்ற இடத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டுவரும்படி கட்டளையிட்டார்.
இது போல அளகாபுரியை ஆட்சி செய்த பாளையக்காரர்களின் தொடக்கத்திற்கும் இது போன்ற ஒரு செய்தி காணப்பெறுகிறது .
"அந்நாளில் பாண்டிய அரசர் 'தாஷ்டிக சவுந்தர பாண்டிய வன்னியனாரை' அழைத்து தெற்கில் "சுண்டன் " என்ற ஒருவன் சிறு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தொல்லைகள் தருவதாகவும் , அவனை வன்னியனாரும் அவன் பிள்ளைகளும் ஒடுக்கி வர வேண்டும் என்று கட்டளையிட்டார் . அதன் பிரகாரம் தென் சீமை சென்று சுண்டன் என்பவனை ஒடுக்கி மதுரையில் வந்து அரசனை கண்டதால் , மன்னர் மகிழ்ந்து தென்சீமைக்கு சென்று ஆட்சி செய்யுங்கள் என்று கூறி பல விருதும் வெகுமதியும் அளித்து பட்டமும் கட்டி அனுப்பினார் " என்பதே அந்த செய்தி .
தாஷ்டிக சவுந்திர பாண்டியனார் , பாண்டிய மன்னர் தென்சீமையில் அளித்த பகுதியில் தம் பிள்ளைகளில்
ஒருவரை அவனியங்கோன் ஏந்தலிலும்
ஒருவரை அச்சந்த விளத்தானிலும்
ஒருவரை புத்தூரிலும்
ஒருவரை தென்மலையிலும்
ஒருவரை திருவேங்கடத்திலும்
அமர்த்தி ஆண்டு வரும்படி செய்தார் என்பதாகும் .
மேற்கூறப்பட்ட தாஷ்டிக சவுந்தர பாண்டியனார் மற்றும் பாண்டிய மன்னர் சார்ந்த செய்திகள் , இந்த சமஸ்தானத்து வாரிசுகளால் கூறப்பட்டு அதனை அப்போதைய தொல்லிய இயக்குனர் திரு . நடன காசிநாதன் அவர்கள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலாக வெளியிட்டுள்ளார் .
இந்த நூலை எழுத உதவியவர்கள் யார் என்ற செய்தியையும் இந்த கட்டுரையின் முடிவில் தருகிறேன்
இதில் சொல்லப்படும் சுண்டன் என்னும் கலகக்காரன் இருந்த பகுதி இப்போதைய சுண்டன்குளம் என்றும் , அப்பகுதிதான் முதன்முதலில் தாஷ்டீக சுந்தர் பாண்டிய வன்னியர் ஆட்சி புரிந்து , அதன் பிறகு அங்கிருந்து தென்மலையை தலைநகராக கொண்டு ஆட்சியை தொடங்கியுள்ளனர் .
சிவகிரி பாளையக்காரர்களின் மரபு வழி பட்டியலில் கிபி 1916 ஜூலை திங்கள் 24-ஆம் நாள் திருத்தம் செய்து அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது .
மூன்றாவதாக "பெரிய சங்கு வன்னியனாரும் "
நான்காம் பாளையக்காரராக "வரகுணராம வன்னியனாரும் "
காணப் பெறுகின்றனர் .
நான்காம் பாளையக்காரர் "வரகுணராம வன்னியனார் " அவர்களின் தொடக்க கால ஆட்சி வரை இவர்களின் தலைநகரம் தென்மலைதான் . கிபி 1733- யில் வரகுணராம வன்னியனார் இருந்திருக்கிறார் . அவ்வாறெனில் அவருக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் அரசுக்கு தெரிந்த வகையில் மூவர் இருந்துள்ளனர்
தென்மலையில் ஆட்சி செய்த வரகுணராம வன்னியனார் அவர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார் என்பது , அவர் மீது கடிகை முத்து புலவரால் பாடப் பெற்ற " திக்கு விஜயம் " என்னும் நூலாலும் , புகழேந்தி புலவர் இயற்றிய "சிவகிரி காதல் " என்னும் நூலாலும் புரிந்துகொள்ள முடிகிறது .
வடகரை பாளையக்காரருக்காக தென்மலை வன்னியனார் அவர்கள் , திருமலை நாயக்கர் மந்திரி ஆறை அழகப்ப முதலியார் அவர்களை கொலை செய்ததால் , வடகரை பாளையக்காரர் சிவகிரி பகுதியில் தென்மலையாருக்கு அரண்மனை கட்டி தருகிறார் .
தென்மலை வன்னியனார் சிவகிரிக்கு வந்து ஆண்டு கொண்டிருக்கையில் , அழகப்ப முதலியாரின் மகன் குமாராசாமி தளவாய் சிவகிரி மீதி படையெடுத்து வரகுணராஜா வன்னியனாரை கொலை செய்கிறார் .
அவரை பற்றிய பாடல்கள்
அவரை பற்றிய பாடல்கள்
சிவகிரியை தலைநகரமாக கொண்டு வரகுண பாண்டிய வன்னியனார் ஆண்டு வருகையில் , இம்மன்னன் காஞ்சிபுரம் பிரம்மகுல அகோர சிவந்தபாதைமூருடையத் தேசிகரவர்களை தரிசனம் செய்து திருநீறு பெற்று வாழ்ந்து வரும் நாளையில் , அத்தேசிகர் தென்காசி விசுவநாதசுவாமி சன்னதியில் மடத்ததிபராக வந்திருப்பதை அறிந்த மன்னர் , குருவுக்கு காணிக்கை செய்வதற்காக ஒரு தரும சாசனம் வெளியிட்டுள்ளார் .
அதில் மன்னரின் மெய்க்கீர்த்தி - அரசுபதி
- வில்லி
- வன்னிய குலதிபதி
- அக்கினி கோத்திரத்தான்
பெண்ணை வரை சம்பு வன்னியன்
காவிரி வரை வீறு வன்னியன்
சேது வரை கங்கை வன்னியன்
தில்லை கீள்பால் காளத்தி வரை இந்திரா வன்னியன்
இப்பாட்டையம் தென்காசி செப்பு பட்டயம் / பன்னீராயிரம் செப்பு பட்டையம் என்ற பெயர்களில் வெளி வந்துள்ளது
KANTHASAMI KANDAR BOOK PROOF PASTE HERE.
தெற்கில் வன்னியர்கள் இல்லை என்பது மிகைத்தவாறு . திண்டுக்கல் , நெல்லை , தூத்துகுடி அல்லாது கன்னியாகுமரி வரை வன்னியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அவர்கள் எண்ணிக்கைதான் கூடி குறையுமே தவிர . மக்களே இல்லை என்பது பொய்யான வாதம்
சரி இப்போது சிவகிரி பாளையம் வன்னியர்களுடையது என்பதை விளக்கும் சில ஆதாரங்களை பார்ப்போம்
ஆதாரம் ஒன்று
தென்னிந்திய சாதியும் குலங்களும் என்ற நூலில் திரு.எட்கர் தர்ஸ்டன் அவர்கள் வன்னியர்களின் பாளையங்களாக குறிப்பிடும் பகுதிகள் . இப்பகுதிகளில் வன்னிய பெண்கள் இஸ்லாமியர்களை போல கோஷா முறையில் திருமணம் செய்வதாக குறிப்பிடுகிறார் . இன்றும் பிச்சாவரம் , அரியலூர் சமஸ்தானத்தில் வன்னிய ராஜ வம்ச பெண்கள் இதனை தொடர்கின்றனர் . KANTHASAMI KANDAR BOOK PROOF PASTE HERE.
ஆதாரம் இரண்டு :
திருநெல்வேலி கெசட்டில் அங்குள்ள பாளையங்கள் பற்றிய செய்திகள் இருக்கிறது . அதில் சிவகிரி பற்றி முதலில் பதிந்த செய்தி . இது வன்னியர் என்றும் பிறகு வன்னியரா ? வன்னிய மறவரா என்ற குழப்பத்திலேயே பதித்தவர்கள்
கெசட்டின் இறுதியில் தெளிவாக " சிவகிரி பாளையக்காரர்கள் தம்மை "வன்னியர் மறவர் " என்று சொல்லி கொள்ளும் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் . வன்னியர் சாதியினர் என்று தெளிவாக பதிந்துள்ளனர் .
அதோடு அல்லாமல் அவர்கள் பாண்டிய மன்னரால் சுண்டன்குளத்தில் குடி அமர்த்தப்பட்டு , அதன் பிறகு தென்மலைக்கும் அதன் பிறகு சிவகிரிக்கும் சென்று ஆட்சி செய்த செய்தியையும் குறித்துள்ளனர்
கெசட்டின் இறுதியில் தெளிவாக " சிவகிரி பாளையக்காரர்கள் தம்மை "வன்னியர் மறவர் " என்று சொல்லி கொள்ளும் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் . வன்னியர் சாதியினர் என்று தெளிவாக பதிந்துள்ளனர் .
அதோடு அல்லாமல் அவர்கள் பாண்டிய மன்னரால் சுண்டன்குளத்தில் குடி அமர்த்தப்பட்டு , அதன் பிறகு தென்மலைக்கும் அதன் பிறகு சிவகிரிக்கும் சென்று ஆட்சி செய்த செய்தியையும் குறித்துள்ளனர்
ஆதாரம் மூன்று :
history of the millitary transactions of the british nation in indostan என்ற நூலில் திரு. சாரமே அவர்கள் சிவகிரி சமஸ்தானத்தவர்கள் சாதியால் வன்னியர்கள் என்பதை குறித்துள்ளார்
ஆதாரம் நான்கு :
வரகுணராமன் புகழப்படும் "சிவகிரி காதல் " என்னும் நூல்
"வன்னிய குல தீப வரகுணராம பாண்டியன் "
இந்நூல் சிவகிரி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி வாரிசுகளால் நேரடியாக நேர்க்காணல் செய்து எழுதப்பட்டு வெளியிடப்பட்ட " தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " நூலில் இருந்து
சிவகிரி வன்னியர் சமூத்தவரே என்பதற்கு மேலும் சில செப்புப்பட்டையும் சான்றாக அமைந்துள்ளது .
முதல் செப்புப்பட்டையும் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த திரு .முனுசாமி நாயுடு அவர்களிடம் இருந்து பெறப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுகாக்கப் படுகிறது ("வன்னியர் ", செப்பு பட்டயம் எண் 21)
அதே போல வரகுணராம பாண்டியனும் காஞ்சிபுரம் சன்னதி மடத்தில் தீட்ச்சை பெற்றவரே .
காஞ்சிபுரம் முதல் கிழக்கிலும்
அங்கிகோட்டத்துக்கு மேற்கிலும்
தேவப்புரயாகை வடக்கிலும்
இராமநாதபுரத்துக்கு தெற்கிலும்
அங்கிகோட்டத்துக்கு மேற்கிலும்
தேவப்புரயாகை வடக்கிலும்
இராமநாதபுரத்துக்கு தெற்கிலும்
ஆக சிவகிரி ,அழகாபுரி , ஏழாயிரம் பண்ணை ஆகியவை ராமநாதாபுரத்துக்கு தெற்கில் உள்ளவையாகும்.
இவ்வன்னியர்கள் "சம்புமாமுனி வேள்வியில் பிறந்து வாதாவி , இனத்தாவி , இரத்தனகிரி முதலாகவுள்ள அகில சத்துரு நிவாரணம் பண்ண , வீரசட்டை கட்டி , அக்னி கொடி , புலிக்கொடி , சிங்கக்கொடி , அனுமக்கொடி , பஞ்சவர்ண விருது படைத்தவர்கள் என்றும் கூறுகிறது .
ஆதலால் சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை ஆகியது வன்னிய பாளையம் என்பது தெளிவு .
ஆதலால் சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை ஆகியது வன்னிய பாளையம் என்பது தெளிவு .
Nelson manuel book –history of Madura region I think.
1874 யில் பிறந்து 1964 யில் மறைந்த தேசிய கவிஞர் சேலம் .அர்த்தநாரீஷ்வர்மா அவர்கள் தாம்பாடியுள்ள ஒரு பாடலில் தமிழ்நாட்டில் அரசு செய்த வன்னிய அரசுகளை பற்றி பதிவு செய்துள்ளார் .
அர்த்தநாரீசவர்மா யார் ? ஏப்பேற்பட்டவர் அவர் ? இதற்கான பதிலும் நமக்கு தேவைதானே . ஆம் அவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கீழே
இவர் தம் க்ஷத்ரியர் என்னும் இதழில் எவையெல்லாம் வன்னிய அரசுகள் என்று 1900 -களிலேயே பதிவு செய்துள்ளார். அரியலூர் மழவர் , அழகாபுரி மற்றும் சிவகிரி பாண்டியர் ,பிச்சாவரம் சோழனார் , உடையார்பாளையம் , பரூர் கச்சிராயர் , ஊற்றாங்கால் வணங்காமுடியார் என்பதாகும்
ஆதாரம்
இவர் தம் க்ஷத்ரியர் என்னும் இதழில் எவையெல்லாம் வன்னிய அரசுகள் என்று 1900 -களிலேயே பதிவு செய்துள்ளார். அரியலூர் மழவர் , அழகாபுரி மற்றும் சிவகிரி பாண்டியர் ,பிச்சாவரம் சோழனார் , உடையார்பாளையம் , பரூர் கச்சிராயர் , ஊற்றாங்கால் வணங்காமுடியார் என்பதாகும்
இது போல இன்னும் சில சொத்து சார்ந்த ஆவணங்களும் இருக்கின்றன .. அதில் சில செய்திகள் "தென்தமிழ்நாட்டு பாளையக்காரர் வரலாறு " என்னும் நூலில் ஜமீனின் ஆதரவுடன் பதியப்பட்டுள்ளது . அவை கீழே
இதே போல கருப்பாயி நாச்சியார் அவர்கள் எழுதி கொடுத்த கொடை களிலும் ஸ்த்ரீ வன்னியர் என்றே குறிப்பிடப்பட்டுளள்து
ஆதாரம்
மைனர் வரகுணராம பாண்டிய வன்னியனார் இறந்த பிறகு , அவரது பாட்டனார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் (பெரியவர் ), தம்பி வரகுண ராம பாண்டிய சின்னத்தம்பியாரின் (சிறியவர் ) பெயரன் செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் சிவகிரியில் இருந்து கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு 1914 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 21 யில் ஒரு விண்ணப்பம் அனுப்பியுள்ளார் . அவ்விண்ணப்பத்தில் 09-01-1914 அன்று இரவு 10.00 மணி அளவில் இயற்க்கை எய்து விட்ட சிவகிரி ஜமீன்தார் இராமலிங்க வரகுணராம பாண்டிய வன்னியனாருக்கு திருமணம் ஆகாமல் , குழந்தைகள் இல்லாததாலும் அச்சமீனுக்கு தாம்தான் உரிய வாரிசு என்றும் தமக்கு அச்சமீனை ஆளும் உரிமையும் சொத்தும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் .
நீதிமன்ற ஆவணங்கள்
" தான் உயிருள்ள வரை வன்னியராகவே இருப்பேன் " என்று பதிலடி தந்த செய்தி இது
நியாயமான கேள்விதான்
சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .
வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .
இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "சங்கிலி வீரப்ப பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .
இந்த சங்கிலி வீரப்ப பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..
அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...
இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .
இருப்பினும் தென்மலை ,சமுசிகாபுரம் , அழகாபுரி மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .
சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..
1. இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .
2. கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..
நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி
சிவகியில் கலப்பு ஏற்படும் முன்பு வரை ஆட்சி செய்து இறந்த சுத்தமான வன்னிய சிவகிரி அரசர் இறந்தபோது அவருக்கு இறுதிகாரியம் செய்தது அவரின் இரண்டாம் மனைவி அழகாபுரி சமஸ்தானத்து இளவரசியார் . மூத்தவர் ஏழாயிரம்பண்ணை
இந்த அழகாபுரி இளவரசியின் மகன் தான் எமக்கு நீதிமன்ற ஆவணம் தந்து உதவியது .
அவரை பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன் .. இறுதி சடங்கு செய்த ஆவணம் இதோ கீழே ..
சிவகிரி அரசர்களின் சொத்து பாத்திரத்திலும் தெளிவாக " சத்ரிய வன்னியர் " என்றே குறிப்பிடப்படுகிறது . ஆண்டு 1932
வன்னியர் தவிர வேறு எவருக்குமே சாதி கெசட் "வன்னியர் " என்றோ " சத்ரிய வன்னியர் " என்றோ குறிப்பிடமாட்டார்கள் என்பதற்கு இந்திய அரசாங்கம் வெளியிட்ட ஆவணம் ஒரு ஆதாரம்
சிவகிரி தென்மலை போன்றவைக்கு ஆதியாக விளங்கும் அழகாபுரி பற்றிய செய்தியிலும் அவர்கள் வன்னியர் என்றே குறிப்பிடப்படுகிறது
சிவகிரி தற்போதைய ராஜா அவர்கள் மட்டும் " வன்னியர் - மறவர் " கலப்பு ஆனாலும் , அவர்களின் உறவினர்கள் , மற்றும் தென்மலை அழகாபுரி போன்ற இதர ஜமீன்தார்கள் இன்னும் சுத்த வன்னியர்களாகவே தம்மை கருதுகிறார்கள் . வாழ்கிறார்கள் .
இவர் தற்போதைய சிவகிரி சேவுக பாண்டியர் என்னும் விக்னேஷ் ராஜாவிற்கு உறவினர் .. வன்னியர் சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்து வருபவர்
தென்மலை சமஸ்தானத்தத்தை சேர்ந்த வீரபாண்டிய வன்னியனார் அவர்களின் மகனின் சாதி சான்றிதழ்
தென்மலை ஜமீனின் வாரிசுகளாக அண்ணன் தம்பிகள் மொத்தம் நாலு பேர் . இதிலும் ஒருவரை தவிர மற்ற மூவரும் வன்னியரின் திருமணம் செய்தவர்கள் . ஒருவர் மட்டும் மறவரின் திருமணம் செய்தவர் . ஆனாலும் வன்னிய சமூக பற்றாளர் .
அவர் பெயர் பெரியண்ண பாண்டியன் . எனக்கு பல செய்திகளை கொடுத்து உதவியவர்
இவர் சிவகிரி ஐந்தாம் அரசர் நினைவு நாளுக்கு அன்னதானம் வழங்கும் செய்தி
இப்போது (பெரியண்ண பாண்டியன்) அவரது சகோதரர் முத்தரசனு பாண்டியன் , மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இனாமாக தந்துள்ளார்
வன்னியர் புகழப்படும் திருக்கைவளம் என்னும் நூல் கூடல் இருவாட்சி புலவரால் பாடப்பெற்றது . இதன் முதல் பாதிப்பு கிபி 1873 யில் பாண்டி நாட்டில் இருந்த பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி புரிந்து வந்த "அக்னி வம்ச சத்ரிய வன்னிய மஹாராஜா கட்டிய நயினார் ஆ.வை .தசவீர பூபதி " அவர்களால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது . இந்த நூலில் "சிவகிரி காதல் மற்றும் திக்கு விஜயம் " பற்றி செய்திகள் காணப்படுகிறது
மேவி சிவன் றாள்பரவும் மேன்மைக்கை "
உமையாள் ஆட்சி புரியும் மதுரையம்பதிக்கு வந்து சிவபெருமானின் திருவடியினை தொழும் சிறப்பை உடையவர்கள் பாண்டியர்களின் சிற்றரசர்களாக விளங்கியவர்கள் சிவகிரி அரசு .
இன்றும் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் "அக்னிகுல சத்ரிய வன்னிய வம்சத்தாரால் " அங்கு ஐப்பசி பவுர்ணமி பூசை நடத்தப்படுகிறது .இப்பழக்கம் தொன்று தொட்டு வரும் ஒரு நிகழ்வாகும் . சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை என்று வன்னிய சமஸ்தானத்து பாளையக்காரர்களால் நடத்தப்பட்ட ஒன்று .. இன்றும் அவர்களின் வாரிசுகளும் , அந்த சமஸ்தானத்து வன்னிய மக்களும் இதனை செய்கிறார்கள் .. இருப்பினும் நேரடி சிவகிரி வம்சத்தினர் மற்றவர்களில் கொண்ட கலப்பால் , கலப்பான குடும்பம் மட்டும் இப்போது இதில் கலந்து கொள்வதில்லை என்று கேள்வி படுகிறோம் .
பாண்டியரால் முதன்முதலில் தரப்பட்ட நிலம் சுண்டன்குளம் . இங்கு குடியேறிய வன்னியர்கள் பின்னாளில் தென் மலைக்கும் சிவகிரிக்கும் சென்றனர் என்பதை பார்த்தோம் .
இந்த சுண்டன்குளம் கோவில் இந்த அங்காளபரமேஸ்வரி கோவில்தான் . இது தெளிவாக "அக்னி குல சத்ரிய வன்னிய சமூகத்துக்கு பாத்தியப்பட்டது " என்கிறது
இந்த கோவிலில் நடந்த கூட்டம் இது




























